News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது புகைப்படத்துக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்கிறார். அதோடு அவர் காமராஜர் குறித்து, ‘’தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.

கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர். எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்’’ என்று கூறியிருக்கிறார்.

அதேநேரம், ஐந்து அரசுப் பள்ளிகள் மூடிவிட்டு, 15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்றிதழும், 10 தனியார் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி ஆணையும் வழங்கியுள்ளது த.வெ.க அரசு.

குதிரைப் பேரம் மூலம் ஆட்சியமைத்து, கள­வா­ணித்­த­னம் செய்வதையும், தனியார்மயத்தை ஊக்குவிப்பதை மட்டுமே கொள்கையாக கொண்டுள்ள த.வெ.க அரசும், மகா யோக்­கி­ய­ரைப்­போல பேசும் விஜய்யும் இப்போது என்ன திமுகவினர் கிண்டல் செய்கிறார்கள்.

அதேநேரம் பாஜகவினர், ‘’15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கியதன் மூலம் அமைச்சர் ராஜ்மோகன் மும்மொழிகளை தமிழக மாணவர்கள் கற்பதற்கு தடையில்லா சான்று வழங்கியிருக்கிறார்’’ என்று கிண்டல் செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link