News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சென்னை கோவளத்தில் நடைபெறும் தமிழ்நாடு அரசின் வெற்றி முதலீடு  மற்றும் செயலாக்க மாநாட்டில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது 67,452 கோடி ரூபாய் மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் முதல்வர் விஜய்க்கு நினைவுப் பரிசு கொடுத்து கெளரவித்தார் அமைச்சர் கீர்த்தனா.

இதையடுத்து இன்று சென்னை அருகே கோவளத்தில் 2வது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் 58,214 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் 65,786 புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்ட், கிளீன்டெக் சோலார், பிரேசிலின் WEG மற்றும் தென் கொரிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் போன்ற நிறுவனங்கள் இதில் கையெழுத்திட்டுள்ளன. முன்னதாக மோட்டார் பைக் சிலவற்றை விஜய் நேரில் பார்த்து பரிசோதனை செய்த காட்சிகள் வைரலாகின்றன.

கடந்த மே மாதம் தவெக அரசு பதவியேற்றதிலிருந்து, மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இன்று நடைபெற்ற திட்டத் தொடக்க விழாக்கள் உட்பட, டி.வி.கே அரசு 74.1% மாற்ற விகிதத்துடன், மொத்தம் ₹ 1.73 லட்சம் கோடி மதிப்பிலான 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது ஒரு மகத்தான சாதனையாக கருதப்படுகிறது.

1.5 டிரில்லியன் இலக்கு என்பதை விஜய் கூடிய சீக்கிரமே அடைந்துவிடுவார் என்பது உறுதி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link