News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்ரு காலை நந்தனத்தில் இருக்கும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் விஜய் மரியாதை செய்தார்.

தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக நேசித்த நற்பண்பு உடைய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119 வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று தமிழகம் முழுக்க சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பசும்பொன்னுக்குச் சென்று முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்துவார் என்று கூறப்பட்ட நிலையில்,  நந்தனத்தில் மரியாதை செலுத்தியிருக்கிறார்.

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக போற்றிய பசும்பொன் தேவர் திருமகனார் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காக நேதாஜி கட்டமைத்த ராணுவத்துக்கு தமிழகத்தில் இருந்து இளைஞர் படை திரட்டி அனுப்பிய தீரர், சாதிய பாகுபாட்டுக்கு எதிரான தூய்மையான ஆன்மிகவாதி. அவருக்கு விஜய் கொடுத்த மரியாதை முக்குலத்தோர் மத்தியில் மகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

அதேபோல் மாற்று சமூகத்தினரும் விஜய் செயலுக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். அதாவது, ‘’பசும்பொன் முத்துராமலிங்கத்தின் குருபூஜைக்கு முதல்வர் விஜய் செல்வதால் அங்கே இருக்கும் பட்டியல் சமூக மக்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம், இது ஓட்டு வங்கி அரசியலாக மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்ததாலே விஜய் பசும்பொன்னுக்குச் செல்லவில்லை.

நந்தனத்தில் மாலை அணிவித்ததன் மூலம் தனக்கு மக்களின் அமைதியும் சமாதானமும் தான் முக்கியம், சாதி ஓட்டுக்கள் அல்ல என்று முதல்வர் உணர்த்தி இருக்கிறார். திராவிட போலி சம்பிரதாயங்களை ஒழித்துவிட்டு நிஜமான மக்கள் தலைவராக காட்சியளிக்கிறார்’’ என்று வாழ்த்துகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link