Share via:
முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று முதல் தமிழக அனைத்து
கூட்டுறவு பண்டகசாலை கடைகளிலும் ஒண்ணரை கிலோ அடங்கிய பலவேறு மளிகை சாமான்கள் மொத்த
பாக்கெட்டுகளில் 200 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகை தீபாவளி வரை தொடரும்
என்று சொல்லப்படுவது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இதில் வழங்கப்படும் 10 வகையான மளிகைப் பொருட்களின் மொத்த மதிப்பின்
மொத்த விலை 1,450 என்றும் 200 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
128 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் எனவும், அக்டோபர் 30,
2026 முதல் விற்பனை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 10 அத்தியாவசியப் பொருட்களின்
பட்டியல் இதுதான். கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகாய், தனியா,
பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு ஆகிய 10 பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை
செய்யப்படும். மக்களின்
பண்டிகைக் காலச் சுமையைக் குறைக்கும் வகையில் கூட்டுறவுத் துறையின் சிறப்பான நடவடிக்கை
என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் செலவைக் குறைத்து,
சாதாரண மக்களும் நடுத்தரக் குடும்பத்தினரும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும்
வகையில் விஜய் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
மக்களின் அன்றாடத் தேவைகளையும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையையும்
கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், பண்டிகைக் காலத்தில் கூடுதல்
மகிழ்ச்சியை அளிக்கின்றன.
சபாஷ் விஜய்

