Share via:
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் அவரை யாரும்
அத்தனை எளிதாக சந்தித்துவிட முடியாது. போயஸ்கார்டன் என்றாலும் கொடநாடு எஸ்டேட் என்றாலும்
வாசலில் காத்துக்கிடக்க வைத்து, அதன்பிறகே அழைப்பு வரும். அதே பாணியில் விஜய்யும் யாராலும்
சந்திக்கமுடியாத நபராக மாறிவருவதால், அவரை ஆம்பிளை ஜெயலலிதா என்கிறார்கள்.
இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பூட்டப்படும் கேட். மறுபடி திங்கள் காலை 9 மணிக்கு தான் திறக்கப்படுது… ஒரு மாநிலத்தின் முதல்வர் ரெண்டு நாள் அப்படியே காணாம போயிடுறார். மற்ற நாளில் தினமும் மாலை 6 மணிக்கு மேல் வீட்டுக்கு ஓடி விடுகிறார்.
தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் என யாரையும் சந்திப்பதில்லை. தன்னைத்தானே கடவுளாக நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் உரிமை சார்ந்து , கூட்டணி கட்சிகள் சார்ந்து, விவசாயிகள் சார்ந்து என பல பிரச்சினைகளுக்கு எதுவுமே வாய் திறக்காமல் இருக்கிறார்.
எப்பேர்பட்ட ஆட்சியாளர்களுக்கும் மக்கள் மீது பயம் இருக்கும்.. எங்கே மக்களுக்கு நம்மீது கோபம் வந்து விடுமோ என்று… ஆனால். பழி போட திமுகவும், மக்களை திசை திருப்ப இணைய கூலிப்படையும் இருக்கிறது என்ற மெதப்பில் மிதந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின்
ஆணவத்தை மிஞ்சிவிட்டார் விஜய்..’’ என்கிறார்கள்.
அதேபோல் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, ‘’அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை பொதுமக்களை சந்திப்பதில்லை, கருத்து கேட்பதில்லை அது சார்ந்த அதிகாரிகளிடமோ, அமைச்சர்களிடமோ ஆலோசிப்பதில்லை. அதுபோல் தோழமைக் கட்சி தலைவர்களின் கருத்துகளை நேரிலோ அல்லது பத்திரிக்கை வாயிலாகவோ அறிந்து அது சார்ந்த ஆலோசனைகளை அமைச்சர், அதிகாரிகளிடம் விவாதித்து தெரிவிக்கும் குறைந்த பட்ச நாகரீகம் இல்லை.
சி.எம். சார்அரசியலுக்கு வரும்போது நடிப்பை விட்டுவிட்டு வருகிறேன் என்று தம்பட்டம் அடித்தவர் பழைய நடிப்பு தொழிலின் நண்பர்களான நால்வரின் ஆலோசனையை பெற்று ஆட்சியிலும் நடித்து வருவது தமிழ்நாட்டுக்கு ஆபத்தானது சி.எம்.சார்.
திங்கள் முதல் வெள்ளி வரை கோட்டைக்கு வருவதும் மாலையில் ஒரு ரீல் வெளியிடுவதும் பனையூருக்கு சென்று பதுங்கி கொள்வதும். வெள்ளி முதல் திங்கள் வரை மறைந்து விடுவதும் வாக்களித்த மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.