Share via:
திராவிட கட்சி ஆட்சியில் குறிப்பாக திமுக ஆட்சியில் இந்து சமய
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் அலட்சியமாகவே கையாளப்பட்டு வந்தது. இந்நிலையில்
கிறிஸ்தவரான விஜய் ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறைக்கு தனி அமைச்சக அந்தஸ்து
வழங்கியிருப்பது இந்துக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து இந்து
சமய அறநிலையத்துறை இயங்கிவந்தது. இதனை மாற்றி, புதிய இந்து சமய மற்றும் அறநிலையத் துறையை
உருவாக்குவதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. அதாவது வருவாய்த்துறை ஆணையரகம்
போன்று இந்து சமய மற்றும் அறக்கட்டளை நிறுவன ஆணையரகம் என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் செயலாளராக ராஜராமனை நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இப்போது இதற்கு தனியாக அமைச்சக அந்தஸ்து செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்து அறநிலைத்துறை அமைச்சர், தனி அமைச்சக செயலாளர் உத்தரவுகளை செயல்படுத்தும் ஆணையர்
இருப்பதால் இனி துறையின் வேலை வேகம் எடுக்கும் என்கிறார்கள்.
இந்துக்கள் மகிழ்ச்சியடையும் திட்டம்.

