Share via:
முதலமைச்சர் விஜய் வருகிற 10ம் தேதி இரவு சென்னையில் இருந்து துபாய்க்கு
அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். துபாயில் வருகிற 11ம் தேதி நடிகர் அஜித் பங்கேற்கும்
கார் ரேஸ் இருக்கிறது. எனவே, அவரை சந்தித்துப் பேசுகிறார் என்ரு சொல்லப்படுகிறது. இதையடுத்து
லண்டன் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து முதலீடுகளை திரட்டவுள்ளார்.
இந்த வெளிநாட்டு பயணம் காரணமாக 2026 செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட
இருந்த ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது,
இந்த தாய்மாமன் தங்க மோதிரம்திட்டம் விரைவில்.. மதுரை, உசிலம்பட்டி
பகுதியில் வைத்து ‘தாய்மாமான் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று தெரிகிறது.
விஜய் வெளிநாட்டுப் பயணம் முடிந்து திரும்பியபிறகு தாய்மாமன் திட்டம் தொடங்கும் தேதி
குறித்து அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உசிலம்பட்டியில் முதல்வர்
விஜய் தொடங்கி வைப்பது ஏன் என்பதற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் மட்டுமே தாய் மாமன்கள்
சீர் என்பது இன்றைய காலகட்ட வரையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தனது சகோதரி திருமணம், குழந்தை பிறப்பு என ஒவ்வொரு காலகட்டத்திலும் அனைத்து சீர்களையும்
இன்றளவும் உசிலம்பட்டி தாய் மாமன்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். இதனாலேயே தாய் மாமன்
தங்க மோதிரம் திட்டம் இங்கு தொடங்கி வைக்கப்படுவதாக முதல்வர் விஜய்க்கு நெருக்கமான
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

