News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

ஆட்சிக்கு வந்து 60 நாட்களுக்குப் பிறகு இன்று கரூர் செல்கிறார் முதல்வர். இந்த பயணத்தை விஜய்யால் மறக்கவே முடியாது.

ஏனென்றால் தேர்தலுக்கு முன்பு நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் மக்கள் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் மரணம் அடைந்தனர். அவர் கண் முன்னே தூக்கிச்செல்லப்படும் அவலத்தைப் பார்த்தும் விஜய் கண்டுகொள்ளவில்லை. மரணம் பற்றிய செய்தி வந்ததும் சென்னைக்குப் பறந்துவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உத்தரவு அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்காக ஏற்கனவே 2 முறை டெல்லி செய்தியை அலுவலகத்தில் விஜய் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் கரூர் சம்பவத்திற்குக் காரணம் ஸ்டாலினின் காவல் துறை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது.

இந்தநிலையில் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து அதன்பின்பு சாலை வழியாக கரூர் வருகிறார் விஜய். கருப்பு உடையில் கரூருக்குக் கிளம்பியிருக்கிறார் விஜய். மதியம் 12.45 மணிக்கு கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது, இதே கரூரில் தான் தேர்தலுக்கு முன்பு தவெக-வின் மக்கள் சந்திப்பு கூட்டம் நிறுத்தப்பட்டது.

இன்று நடக்கும் முக்கிய கூட்டத்தில் விஜய் பேச்சு எலோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் விஜய் முக்கியமான அறிவிப்புகளை வெளியிடவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 12.45 மணிக்கு துவங்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் முடிந்த உடன், கரூர் தாந்தோணிமலையில் இருக்கும் அரசு சுற்றுலா மாளிகைக்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தை ரோடு ஷோ ஆக மாற்றுகிறார் விஜய்.

இதன் பின்பு 2.50க்கு சுற்றுலா மாளிகையில் இருந்து கிளம்பி 3 மணிக்கு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 குடும்பத்தினரை சேர்ந்த 32 பேருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்க உள்ளார்.

இதோடு கரூரில் மணவாசி பகுதியில் 1700 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ள தோல் அல்லாத காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் விஜய்.

இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடுவாரா அல்லது கரூர் சம்பவத்திற்கு ஸ்டாலினே காரணம் என்று மீண்டும் அழுத்தமாகச் சொல்வாரா என்று பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link