Share via:
இன்று சட்டமன்றத்தில் திமுகவினரை பார்த்து, ‘மூன்று துறை தொடர்பான
ஃபைல்கள் டேபிளில் உள்ளன. அவற்றை திறக்க வைத்துவிடாதீர்கள்’’ என்று எச்சரிக்கும் தொனியில்
பேசியிருக்கிறார்.
இன்று சட்டமன்றட்தில் பேசிய விஜய், ‘’மூன்று துறை தொடர்பான ஃபைல்கள்
என்னுடைய டேபிளில் இருக்கிறது. அத்தணையும் ஆதாரங்களுடன் இருக்கிறது.. அதனை ஒப்பன் பண்ண
வைத்துவிடாதீர்கள். எதை எப்போது ஒப்பன் பண்ணணுமோ அது அப்போது ஒப்பன் ஆகும்” என
சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.
செந்தில்பாலாஜி, நேரு, சேகர்பாபு ஆகிய மூன்று பேரையே விஜய் சுட்டிக்
காட்டுகிறார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’ஆடிட் அறிக்கையை சுட்டிக்காட்டியே
விஜய் பேசுகிறார். அதாவது, ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்பதுதான்
அவரது பேச்சு வெளிப்படுத்தும் செய்தி. ஊழல் நடந்ததற்கான ஆதாரம் கிடைத்துவிட்டால் உடனடியாக
நடவடிக்கை எடுக்காமல் ‘எதை எப்போது ஒப்பன் பண்ணணுமோ அதை அப்போது ஒப்பன் ஆகும்’ என்றால்
அதற்கு என்ன பொருள்? ஆதாரம் கிடைத்துவிட்டால் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் எந்த தருணத்துக்காக
முதல்வர் காத்திருக்கிறார்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.