Share via:
தமிழக தேர்தல் முடிவுகள் போகும் திசையைப் பார்த்தால் தனிப்பெரும்பான்மை
யாருக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. எனவே, அந்த வகையில் தனிப்பெரும்
கட்சியை சேர்ந்த தலைவரை ஆளுநர் முதலமைச்சராக அழைப்பார். பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை
நிரூபித்துக்கொள்ளலாம்.
எனவே மேஜிக் எண் 118 கிடைக்கவில்லை என்றாலும், இப்போது இருக்கும்
சூழலில் விஜய் முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. திமுகவும் அதிமுகவும் ஓட்டுக்கு
காசு கொடுத்தும் மக்கள் எந்த மாற்றமும் இல்லாமல் விஜய்க்கு ஆதரவாக வாக்கு போட்டிருக்கிறார்கள்.
இதை பார்க்கையில் பணத்தைத் தாண்டி மக்களிடம் மாற்றம் வேண்டும்
என்ற எண்ணம் தெளிவாக தெரிகிறது. அதனால் பணம் கொடுத்தாலும் ஓட்டு பெரியதாக கிடைக்காது
என்பது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் ராகுல் கடும் கோபத்தில் இருக்கிறார். விஜய்யுடன்
கூட்டணி வைப்பதுதான் ராகுல் காந்தியின் விருப்பமாக இருந்தது. ஆனால், எப்படியோ ராகுலை
ஆஃப் செய்து திமுக கூட்டணி அமைத்துவிட்டது.
காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் 70 இடங்கள் வரை வாங்கி மிகப்பெரும்
எண்ணிக்கையில் கூட்டணியில் பெரிய கட்சியாக இருந்திருப்பார்கள். நல்ல வாய்ப்பு பறி போனதில்
ராகுல் காந்தி செம டென்ஷனில் இருக்கிறார். எத்தனை எம்.எல்.ஏ கிடைத்தாலும் தேர்தலுக்குப்
பிறகு விஜய்க்கு ஆதரவு என்பதில் ராகுல் உறுதியாக இருக்கிறாராம்.
சென்னை திமுகவின் கோட்டை என்றனர், எம்ஜிஆர் கூட இந்த கோட்டையை
தகர்க்க முடியவில்லை. இப்போது சென்னையில் திமுக 16 தொகுதியிலும் ஓட்டை போட்டுவிட்டார்
விஜய்.
