News

விஜய்க்கு அமைச்சரவை ரெடி. த்ரிஷாவுக்கு பதவி இல்லையாம்

Follow Us

விஜய் கட்சி ஆட்சிக்கு வரும் என்று அவரது ரசிகர்களில் பெரும்பான்மையானவர்கள் நம்புகிறார்கள். இந்த நிலையில், மந்திரி சபை பட்டியல் பனையூரில் தயாராவதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், இதை வதந்தி என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், விஜய் வேட்பாளர்களுடன் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு விஜய்யும் அப்படித்தான் நம்புகிறார் என்பது தெரியவந்துள்ளது.

அதனாலே எக்ஸிட் சர்வே முடிவுகளில் பெரும்பான்மை திமுகவுக்கு சாதகமாக இருக்கும் சூழலில், ஜெயிக்கப் போவது நாம்தான். ஜெயித்தவுடன் எல்லோரும் பனையூருக்கு வாருங்கள் என்று விஜய் பேசி நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

நேற்றைய தினம் வேட்பாளர்கள் அனைவரையும் பனையூருக்கு அழைத்திருந்தார் விஜய். அவர்களிடம், ‘’அனுமதி கிடைக்காததாலும், மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்ததாலும் அநேக இடங்களுக்கு வர முடியவில்லை, தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் நிச்சயமாக மக்களை சந்திப்பேன் என அவர்களிடம் கூறுங்கள்

இதுவரை நன்றாக பணியாற்றினிர்கள், பூத் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நான் நன்றி சொன்னேன் என்று தெரிவியுங்கள். நாம் எல்லோரும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது, எல்லோரும் அதே நம்பிக்கையுடன் மே 4 வரும் முடிவுகளை நோக்கிக் காத்திருங்கள்

மே 4, காலை 6 மணிக்கே வாக்கு என்னும் இடங்களுக்கு சென்று விடுங்கள்,வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருங்கள், அந்த சமயத்தில் என்ன பிரச்சனையானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எவ்வளவு நேரம் ஆனாலும் பனையூர் வாருங்கள், உங்களுக்காக நான் இங்கு காத்திருப்பேன். நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.

விஜய் ரசிகர்களை தேர்தல் முடிவு என்று பாதுகாப்பாக வைத்திருங்கள் என்று பலரும் எச்சரிக்கை செய்யும் நிலையில், விஜய்யை பத்திரமாக வைத்திருக்க வேண்டியதுதான் மிகவும் முக்கியம் போன்று தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link