Share via:
விஜய் இப்போது திருச்செந்தூர், சீரடி என்று ஒவ்வொரு கோயிலாக சுற்றிக்கொண்டு
இருக்கிறார். இதற்கு காரணம், விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் என்று சொல்லப்படுகிறது.
அவர் கணிப்புபடி, ‘விஜய்யின் ஜாதகம் “சுனாமி” போல இருக்கிறது.
அவருடன் யாராலும் போட்டியிட முடியாது. அதனால் தமிழகத்தில் 50%+ வாக்குகளுடன் முதல்வராக
வருவார் என்று கணித்துக் கொடுத்துள்ளார். அவர் கணித்து கொடுத்ததின் அடிப்படையில் சுப்ரமணிய
சுவாமி திருக்கோவிலில் எதிரிகளை ஒழிப்பதற்கு பூஜைகள் செய்திருக்கிறார்.
எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து விஜய்யின் ஜோதிடரும் விஜய் கட்சியின்
செய்தித் தொடர்பாளர் ராதன் பண்டிட், ‘’இந்த எக்சிட் போல் முடிவுகளை நாங்கள் கண்டுகொள்ளவில்லை,
அதை அப்படியே புறக்கணிக்கிறோம். இந்தத் தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில்
எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. நாங்கள் 140 முதல் 170 தொகுதிகளுக்கு மேல் வெற்றி
பெறுவோம் என உறுதியாக நம்புகிறோம்.
நாங்கள் கள நிலவரத்தைத் துல்லியமாக ஆய்வு செய்துள்ளோம். எங்களுக்கெனத்
தனியாகத் தனிப்பட்ட முறையில் சர்வே நடத்தினோம். எக்சிட் போலில் சொல்லப்படுவது போல எங்களுக்கு
20-25 சதவீத வாக்குகள் கிடைக்காது. மாறாக, குறைந்தபட்சம் 45 சதவீத வாக்கு வங்கியை நாங்கள்
உறுதி செய்துள்ளோம். விரைவில் எங்கள் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பிரம்மாண்டமான
முறையில் பதவியேற்பார். இது உறுதி’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த புண்ணிய ஜோதிடர்தான் 2019-ல் பிரியங்கா காந்தி பிரதமர் ஆவார்
என்றும் 2021-ல் கமலஹாசன் முதல்வர் ஆவார் என்றும் துல்லியமாக கணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நம்பிக்கை சூப்பரு.
