News

விஜய்க்கு அமைச்சரவை ரெடி. த்ரிஷாவுக்கு பதவி இல்லையாம்

Follow Us

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்காக சிலிண்டர் விலை ஏற்றம் நிறுத்தி
வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது உண்மை இல்லை என்று மத்திய அரசு சொல்லிவந்தது. ஏனென்றால்,
போர் சூழல் காரணமாக பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு அபாயம் நீடிக்கிறது.

ஆனால், தேர்தல் முடிந்தவுடனே பாஜக வேலையைக் காட்டிவிட்டது. வணிக
சிலிண்டருக்கு கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் விலையை அதிகரித்துவிட்டது.

 சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின்
அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
 

அந்த வகையில், இன்று சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ
எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.990 உயர்ந்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்
விலை ரூ.2,246.50இல் இருந்து ரூ.3,237ஆக உயர்ந்துள்ளது.

மார்ச் மாதம் ஒன்றாம் தேதி வணிக சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில்
மீண்டும் மார்ச் 7ம் தேதி உயர்ந்தது. மீண்டும் ஏப்ரல் 1ம் தேதி வணிக சிலிண்டர் விலை
உயர்ந்த நிலையில் தற்போது மாத தொடக்கத்திலேயே உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றம் ஹோட்டல் தொழிலை கடுமையாகப் பாதிக்கும் என்று
சொல்லப்படுகிறது. ஏற்கெனவே பல ஹோட்டல்கள் பகுதி நேரம் செயல்படுகிறது. இனிமேல், அதற்கும்
ஆப்பு வந்துவிட்டது. 

அடுத்து வீட்டுக்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link