News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அண்ணாமலைக்கு கட்சிக்குள் இத்தனை எதிரிகளா..? வானதி கூட மதிக்கலையே

அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி மட்டும் தரவில்லை என்றால் பா.ஜ.க.விலே இருக்கமாட்டோம் என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பதிவுகளை போட்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் பா.ஜ.க.வில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். இதுகுறித்து அண்ணாமலை, ‘’மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தேசியத் தலைவர் நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து […]

ஒர்க் ஃப்ரம் ஹோமுக்கு ஆப்பு. மூன்றாம் பாலினம் இல்லை. டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனில் நடந்த பதவியேற்பு விழாவில் அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி டொனால்டு டிரம்புக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது தனது குடும்ப பைபிள் மற்றும் ஆபிரகாம் லிங்கனின் பைபிளை பயன்படுத்தி அதிபராக பதவி ஏற்று கொண்டார் டிரம்ப். பதவியேற்றதும் டிரம்ப் பேசுகையில், ‘’அமெரிக்காவின் பொற்காலம் இப்போதே தொடங்குகிறது என்று கூறிய டிரம்ப், இந்த நாளில் இருந்து நமது […]

சீமான் போட்டோ… ஆடியோ எல்லாமே போலியா..? இப்படி பண்றீங்களேப்பா

பெரியார் மீது சீமான் விமர்சனம் வைக்கத் தொடங்கியபிறகு அவரது ஆதரவாளர்களே எதிர்நிலை எடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் சங்ககிரி ராஜ்குமார். வெங்காயம், பயாஸ்கோப் போன்ற படங்களை இயக்கியிருக்கும் ராஜ்குமார் பேசிய விவகாரம் தமிழக அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில் பேசிய சங்ககிரி ராஜ்குமார், ‘’நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக பணி செய்து வந்தேன். அப்போது நண்பர் ஒருவர் பிரபாகரன் மற்றும் சீமான் புகைப்படங்களை கொடுத்து இரண்டையும் ஒன்றாக மேட்ச் செய்து தருமாறு கேட்டார். எதற்காக […]

ஐஐடி கேன்டீனில் கோமியம் சப்ளை..? இயக்குநருக்கு எவ்ளோ மூளை

  சென்னை மேற்கு மாம்பலம் கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, ‘”கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. தமிழர்கள் காசி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்” என பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வட மாநிலங்களைப் போன்று தென் மாவட்டத்தையும் மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. காமகோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தமிழ்நாடு மாணவர் கழகம், ’’கோமியம்  குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் […]

சீமானுக்கு கவிஞர் அறிவுமதி சவால்… விவாதத்துக்கு ரெடியா?

பெரியாரை ஒழித்துக்கட்டுவது தான் என்னுடைய முதல் அரசியல் என்று தொடர்ந்து பெரியார் மீது சீமான் தாக்குதல் நடத்திவருகிறார். பெரியார் பற்றி என்னுடன் விவாதிக்க யார் வந்தாலும் சரி, நான் ரெடி என்று சவால் விட்டிருந்தார். சீமானுடன் விவாதம் நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று திருமுருகன் காந்தி ஏற்கெனவே கூறியிருந்தாலும் அவரை சீமான் தரப்பினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் சீமானுக்கு அடைக்கலம் கொடுத்த கவிஞர் அறிவுமதி பெரியார் பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாகச் சொல்லி […]

விஜய் கட்சிக்குப் போகிறாரா காயத்ரி ரகுராம்..? அண்ணாமலை டீம் போலி நோட்டீஸ்

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே காயத்ரி ரகுராமுக்கும் அவருக்கும் மோதல் நிலவியது. ஒரு கட்டத்தில் காயத்ரி ரகுராமுக்கு எதிராக அண்ணாமலை வார் ரூம் தொடர் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அ.தி.மு.க.வுக்குத் தாவினார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கு நல்ல பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அது மட்டுமின்றி பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக, ’யார் அந்த சார்’ போராட்டத்துக்கு வந்த காயத்ரி ரகுராமுக்கும் […]

சீமானை விட அதிக ஓட்டு வாங்கியிருக்கலாம். விஜய் அறிவிப்புக்கு புலம்பும் கட்சியினர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடப் போவது இல்லை என்று ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில், இன்று பொதுச்செயலாளர் ஆனந்த் கடிதம் மூலம் அதனை உறுதி செய்திருக்கிறார். சீமான் கட்சியினர் விஜய் ஆட்களை வளைக்க முயற்சி செய்வதைத் தடுக்கவே கடிதம் மூலம் எச்சரிக்கை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இன்று ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் […]

அடுத்து எம்.ஜி.ஆர். ஆட்சி தான்… எடப்பாடி பழனிசாமியின் வீர வணக்க நாள்

எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி அத்தனை தலைவர்களும் இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். தி.மு.க. சார்பில் சேகர் பாபுவும் இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அடுத்தது எம்.ஜி.ஆர். ஆட்சிதான் என்று எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதோடு வரும் 25ம் தேதி மாணவர் அணியின் சார்பில் வீரவணக்க நாள் கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில், “உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், […]

ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை..? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்… அதிரடி நடவடிக்கை

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு இன்னமும் தீர்வு கிடைக்காத நிலையில், ஐஐடி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வெளிவந்து அதிர வைத்துள்ளது. சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பொங்கல் பண்டிகை அன்று கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு நண்பருடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் வேலை செய்யும் இளைஞர் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஐடி மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்த்தில் புகாரளித்தார். அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார், […]

மத்திய அமைச்சரின் அண்டப்புளுகு அம்பலம். மன்னிப்பு கேட்பாரா அண்ணாமலை..?

தமிழகம் மீதும் தமிழக மக்கள் மீதும் பா.ஜ.க. அரசுக்கு வன்மம் மட்டுமே இருக்கிறது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. மதுரை – தூத்துக்குடி திட்டம் பற்றி செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் சொன்ன பதில் அண்டப்புளுகு ஆகாசபுளுகு எனது அம்பலமாகியிருக்கிறது. இதை நம்பி போராட்டம் நடத்துவதாக அறிவித்த அண்ணாமலை எப்போது மன்னிப்பு கேட்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்துக்கு வந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘’மதுரை – அருப்புக்கோட்டை தூத்துக்குடி புதிய பாதை […]