News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

விடாது சவுக்கு. திரும்பத் திரும்ப விரட்டுறாங்க

ஸ்டாலினை நிம்மதியாக இருக்க விட மாட்டேன். ஆளும் தி.மு.க. அரசின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்திக்கொண்டே இருப்பேன் என்று சமூகவலைதளங்களில் பேசியதால் காவல் துறை மூலம் குண்டர் சட்டம் போடப்பட்டு, இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் சவுக்கு சங்கர். இப்போது  மீண்டும் அவரை குறி வைத்து காவல் துறை பழிவாங்குவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். சவுக்கு சங்கரது பதிவில், ‘’பழிவாங்கும் போக்கில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அருண். கட்டுப்பாடிழந்த முதல்வர். கும்பமேளாவில் படபிடிப்பு நடத்துவதற்காக, சவுக்கு மீடியா கேமராமேன்களோடு சாலை மார்க்கமாக […]

டெபாசிட் பரிதாபங்கள். தனியே நின்றாலும் ஜெயிக்க மாட்டாரா சீமான்..?

ஈரோடு இடைத்தேர்தலில் அத்தனை எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல் பின் வாங்கி விட்டன. புதிதாக வந்த விஜய்யும் போட்டியில்லை என்று அறிவித்தார். அதனால் தி.மு.க.வை எதிர்கொண்ட நாம் தமிழர் சீமான் கணிசமான வாக்குகளைப் பெற்று கடும் போட்டி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வழக்கம் போல் இந்த தேர்தலிலும் டெபாசிட் பறி கொடுத்திருக்கிறார். தேர்தல் முடிவின் படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நாம் […]

மாணவி ஸ்ரீமதியின் தாயார் முதல் குற்றவாளி..? வேங்கைவயல் பாணியில் கள்ளக்குறிச்சி

வேங்கைவயல் குற்றபத்திரிகைக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கிலும் யாரும் எதிர்பாராத வகையில், மாணவியின் தாயார் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருப்பது அதிர்வை உண்டாக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். இதையடுத்து நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. மாணவியின் மரணத்திற்கு […]

எடப்பாடியுடன் விஜய் கூட்டணி அம்பலம்…? அய்யநாதன் பேச்சுக்கு த.வெ.க. கப்சிப்

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு ஆலோசனை நடத்திய காலம் தொடங்கி அவருடன் நெருக்கமாக இருந்தவர் அய்யநாதன். அவர் விஜய் கூட்டணி குறித்து வெளிப்படையாகப் பேசிய விவகாரம் அவரது கட்சியினரை அதிர வைத்திருக்கிறது. கடந்த ஜனவரி 2ம் தேதி விஜய்யுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து அய்யநாதன், ‘’அ.தி.மு.க.வுடன் கூட்டணி சரியா வராது. ஒன்னு எடப்பாடிய நீங்க ஏத்துக்கணும், இல்ல உங்கள முதல்வர் வேட்பாளரா அதிமுக ஏத்துக்கணும் ரெண்டும் நடக்காதுன்னு சொல்லியிருக்காரு அதுக்கு விஜய் இரண்டாவது ஆப்ஷனுக்குத் தான் வொர்க் […]

ஆம் ஆத்மியை தோற்கடித்தது ராகுல் காந்தி..? ஊழலில் தொடங்கி ஊழலில் முடியும் கட்சி

டெல்லி காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டு என்ற கோஷத்துடன் களத்தில் இறங்கி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி அடைந்த ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே தோல்வி அடைந்துள்ளது. ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் கட்சி கை கொடுக்காத காரணத்தாலே இந்த தோல்வி என்றும், இதற்கு ராகுல் காந்தியே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். அதேநேரம் காங்கிரஸ் கட்சியின்ர், ‘’டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 சதவீத அளவுக்கு வாக்குகள் பெற்றுள்ளது. கடந்த கோவா, […]

விஜய் முதல் கூட்டணிக் கட்சி இது தானா..? அப்பா பைத்தியம் ரங்கசாமி அறிவிப்பு

விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் முழு தொடர்பில் இருந்தார். புஸ்ஸி ஆனந்த் இவர்களுடைய சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இவர்கள் இணைவரும் இணைந்து புதுவையில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கபட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், ‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் போட்டியிடும்’ என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்து இருக்கிறார். புதுச்சேரியில் என்ஆர். காங்கிரஸ் கட்சியின் 15-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கிழக்கு கடற்கரைச்சாலையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் […]

சீமானும் விஜய்யும் கூட்டாளிகளா..? சென்சஸ் மோடிக்கு பாதுகாப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம், கும்பமேளா மரணம், அமெரிக்காவில் இருந்து விலங்குடன் இந்தியர்கள் திருப்பப்பட்ட அவமானம் ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்காத நடிகர் விஜய் திடீரென ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்று மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரைப் போலவே சீமானும் இந்த விஷயத்துக்கு மட்டும் குரல் கொடுத்திருக்கிரார். சீமானுக்கும் விஜய்க்கும் இடையில் மிகப்பெரும் யுத்தம் நடப்பதாக அவர்களுடைய கட்சியினர் சண்டை போட்டு வரும் நேரத்தில், இருவரும் சொல்லிவைத்தது போன்று ஒரே நேரத்தில் ஒரே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரே […]

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி..? ஜெயிலுக்குப் போகும் அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடித்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாளை முடிவுகள் வெளிவர இருக்கும் நிலையில், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலுக்குப் போவதை யாராலும் தடுக்க முடியாது.   70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குப் […]

இந்தியர்களுக்கு கை விலங்கு, கால் விலங்கு. விஸ்வகுரு மோடிக்கு வீரம் இல்லையா?

இந்தியர்களை கை, கால்களில் விலங்கு போட்டு அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பிய விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் வெடித்தது. அமெரிக்காவிலிருந்து கை விலங்கிட்டு அழைத்து வரப்பட்டவர்கள் கைதிகள் அல்ல மனிதர்கள் என களத்தில் இறங்கி மோடி அரசுக்கும் டிரம்ப அரசுக்கும் எதிராக ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். அமெரிக்காவில் போதிய ஆவணங்கள் இல்லை என 104 இந்தியர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு சர்வதேச குற்றவாளிகளை கடத்துவது போல இந்தியாவிற்கு ராணுவவிமாஙஅனுப்பியுள்ளது அமெரிக்கா. சாப்பிடும் போது கூட […]

சீமானுக்கு நீதிமன்றத்தில் நச் குட்டு. அடேங்கப்பா சொத்துப் பட்டியல்

செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் அவ்வப்போது வில்லங்க வார்த்தைகள் பேசுவதுண்டு. அப்படி இன்று, ‘மண்டையை உடைச்சுடுவேன்’ என்று எகிறினார். இந்த நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்து விட்டது. கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை […]