நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு. அ.தி.மு.க. கூட்டணிக்கு ரெடியா?

பனையூர் பங்களாவில் இருந்து பாலிடிக்ஸ் செய்துவருகிறார் என்று விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில், பரந்தூருக்கு வந்து ஒரு பரபரப்புக் கிளப்பினார். இதையடுத்து இன்று மாவட்ட நிர்வாகிகளை நேரடியாக சந்தித்துப் பேசுகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு முறைப்படி நடைபெற்றுள்ளது. இப்படி தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் விஜயிடம் கொடுக்கப்பட்டது. அதில் உள்ளவர்களை பகுதி பகுதியாக சந்தித்து விஜய் நேர்காணல் செய்து அதன் பிறகு நிர்வாகிகள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். அதன்படி இன்று அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, […]
சீமானை சுத்தி நின்னு அடிக்கிறாங்க. மதிவதனி அக்கா சீட்டிங், ஆயுத வழக்கு, கட்சி விலகல், போஸ்டர் யுத்தம்

சீமான் என்ன சொன்னாலும் அதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருந்துவந்தது. அதனால்தான் ஆமைக்கறி தொடங்கி எக்கச்சக்க கதைகள் சொல்லிவந்தார். விஜய் கட்சி ஆரம்பித்து பெரியாரைத் தலைவர் என்றதும், அதை எதிர்ப்பதற்காகவே பெரியார் மீது தாக்குதல் நடத்தினார் சீமான். இப்போது புலி வாலை பிடித்த கதையாக தொடர் சிக்கலுக்கு ஆளாகி வருகிறார். திடீரென சென்னையில் எக்கச்சக்க போஸ்டர்கள் முளைத்தன. அந்த போஸ்டரில், ‘மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை’, ‘அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை’ என்று மறைமுகமாக சீமானை திட்டியிருந்தார்கள். இதை […]
டங்ஸ்டன் ஏலம் ரத்துக்கு எத்தனை பேர் சொந்தம் கொண்டாடுறாங்க. உண்மையான வெற்றி யாருக்கு?

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க., மாநிலத்தில் ஆளும் தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், பா.ம.க. என்று எல்லா கட்சியினரும் இந்த வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே, ‘’நான் ஆட்சியில் இருக்கும் அரை ஒருபிடி மண்ணைக்கூட அள்ள விட மாட்டோம் என்று உறுதி கொடுத்தேன். ஏலத்தை முழுமையாக ரத்துச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என்கிற உறுதிக்கும் முன்னால் […]
பிரபாகரனை ஜாமீனில் எடுத்தது யார்..? வரலாற்றை மாற்றலாமா தி.மு.க.?

பெரியார் விவகாரத்தை சீமான் கையில் எடுத்தது தொடங்கி தி.மு.க.வும் அதன் துணை அமைப்புகளும் சீமானுக்கு கடுமையாக பதிலடி கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில், பிரபாகரனை ஜாமீனில் எடுத்ததாக தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுவது பொய் என்று அம்பலப்படுத்தியிருக்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். சீமான் பற்றி விமர்சனம் செய்த ஆர்.எஸ்.பாரதி, ‘’சீமான் சொல்றான் நான் பதில் பேசக்கூடாதாம், முதல்வரும்,துணை முதல்வரும் இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமாம்.அவர்களின் கால் செருப்புக்கு நீ சமமாவாயா? 1980 களில் எம்ஜிஆரால் பிரபாகரன் கைது செய்யப்பட்ட போது அவரை […]
உலக நாகரிகத்தின் முன்னோடி தமிழ் இனமே… முதல்வர் ஸ்டாலின் ஆதாரபூர்வ அறிவிப்பு

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அதோடு, உலகின் பிற பகுதிகளில் இரும்புக் காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ் நாட்டில் இரும்பின் காலம் தொடங்கியதாக தமிழ் நாடு அரசு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று வரலாற்று சிறப்புமிக்க […]
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்னாச்சு..? இப்படி மாறிட்டாரே..

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஏழாம் பொருத்தம் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனால், அவரது சமீபத்திய நடவடிக்கைகளில் நிறையவே மாற்றம் தென்படுகிறது. அதாவது தி.மு.க அரசுக்கு சாதகமாக நடந்துகொள்வதைக் கண்டு பா.ஜ.க.வினர் அதிர்ந்து நிற்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தையொட்டி தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அண்ணாமலை சாட்டையடிப் போராட்டம் நடத்தினார். யார் அந்த சார் என்று அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். நடிகர் விஜய் நேரடியாக ஆளுநரை சந்தித்து புகார் கடிதம் கொடுத்தார். ஆனால், […]
ஞானசேகரனிடம் விடிய விடிய விசாரணை..? வலிப்பினால் உயிருக்கு ஆபத்து..? யார் அந்த 3 பேர்?

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் போலீஸ் காவலில் உள்ள நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக வந்திருக்கும் தகவலை அடுத்து உயிருக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனிடம் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்துவதற்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் […]
விஜய்க்குக் கிடைத்த மெகா சக்சஸ்..? பரந்தூருக்கு அரசு திடீர் விளக்கம்

நடிகர் விஜய் பரந்தூர் போராட்டக்காரர்களை சந்தித்துப் பேசுவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரசிகர்கள் கலந்துகொள்ளவும் தடை செய்யப்பட்டது. ஆனாலும் போராட்டக்களத்துக்கு வந்த விஜய், ‘உங்களுக்குக் கடைசி வரை துணை நிற்பேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் பரந்தூர் மக்களைப் பாதிக்காத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விஜய்க்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகவே அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். தமிழக அரசு சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், ‘’சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது […]
சீமான் படத்துக்கு செருப்படி… முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை?

தந்தை பெரியார் குறித்து வரலாற்று உண்மைகளுக்கு புறம்பாக கீழ்தரமாகவும், அவதூறாகவும் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை இன்று 30க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் முற்றுகைப் போராட்டம் நடத்திவருகிறார்கள். சீமான் வீடு முற்றுகைப் போராட்டத்தை ஒட்டி சென்னை முழுவதும் எக்கச்சக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்களும் ஓட்டப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சீமான் படத்துக்கு செருப்பு மாலை போடுவதுடன் ஃப்ளக்ஸை செருப்பால் […]
கோமியம் குடிக்கும் போராட்டம் நடத்துமா பா.ஜ.க.? மீண்டும் காமகோடி ஆதரவு

கோமியம் மிகப்பெரிய மருந்து என்று ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதற்குகடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மீண்டும் கோமியம் குறித்து ஆய்வறிக்கை இருக்கிறது,நானும் குடித்திருக்கிறேன் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார்காமகோடி. இது குறித்து பேசும் மருத்துவர்கள், ‘’கோமியம் குறித்த புரளி வரும்போதெல்லாம் அமெரிக்காவில் patent வாங்கி வைத்திருப்பதாகசொல்வது வழக்கம். அப்படித்தான் காமகோடியும் அதை மேற்கோள் காட்டியிருக்கிறார். உண்மையில்அமெரிக்கர்கள் யாரும் பேடண்ட் வாங்கவில்லை. நாக்பூரைச் சேர்ந்த Go VigyanAnusandhan Kendra என்ற பசுக்கள் ஆராய்ச்சி நிறுவனம் தான் ஆய்வு […]

