News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நலத்திட்ட உதவி விழாவில் தனுஷ் வழக்கத்துக்கு மாறாகப் பேசியிருக்கிறார். அதாவது, ‘’இவ்வளவு பேர் ஒரே இடத்தில் கூடிருக்கிறீர்கள்… இந்த மாதிரி ஒற்றுமைக்கு ஒரு பெரிய சக்தி இருக்கு. அந்த ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் கொடுக்கணும்… ஆடியோ லாஞ்ச், மீட்டப் மட்டும் இல்லாம, இன்னும் அதிகமான நலத்திட்ட வேலைகளில் ஈடுபடணும்…

உங்க ஏரியாவுல இருக்கிற மக்கள், உங்க வீட்டை சுற்றி வாழும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்… நான் உங்களை இன்னும் பெருமையாக உணரணும்… நீங்கள் அதை செய்வீர்கள் என்று நம்புகிறேன்’’ என்று பேசியிருப்பது அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவில் மஞ்சங்கரணை எனும் கிராமத்தில் அமைந்துள்ள பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்க்கு சொந்தமான வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்தான் தனுஷ் இப்படி பேசினார்.

இந்த விழா ஒரு நடிகரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை போல் தெரியவில்லை. அரசியல் கட்சிகளின் மாநாடுகளில் வைக்கும் அளவுக்கு பிரமாண்ட கட் அவுட் வைக்கப்பட்டது.  மேடையிலும் அப்துல்கலாம் படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இவரை கொள்கைத் தலைவர் போன்று அவ்வப்போது பேசுகிறார்.

அதோடு பேச்சை நிறைவு செய்த போது, “ஓம் நமச்சிவாய” “ஜெய்ஹிந்த்” என்று அவர் கூறியது அவரது நோக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது. இத்தனை ஆண்டுகளில் சினிமாவை தவிர்த்து எதிலும் வாய் திறக்காதவர். மன்றக் கொடி, பிரம்மாண்ட கட் அவுட், நலத்திட்ட உதவி விழா என கிளம்புகிறார் என்றால், நிச்சயம் அரசியலுக்கு வரும் ஐடியா தான்.

தனுஷ் வெள்ளை வேட்டி, சட்டை, ருத்ராட்சம், ஓம் நமச்சிவாயா என கலர் மாறியிருப்பது பாஜகவின் முகமாகக் காட்டுகிறது. ஏனென்றால் இட்லிகடை படத்தில் குலத்தொழில் செய்வதே சரி எனும் இந்துத்வா பிற்போக்கு கொள்கையை புகுத்தினார். அசுரனுக்கு தேசிய விருது பெற்றபோது பலரும் பாராட்டினர். ஆனால் திருச்சிற்றம்பலம், ராயன், கேப்டன் மில்லர் என தொடர்ந்து இவருக்கு தேசிய விருதுகள் தந்தது ஏன் என்பதற்கு விடை கிடைத்துள்ளது.

அதேநேரம் விஜய் ரசிகர்கள், ‘’தனுஷ் கொஞ்சம் கம்முனு இரு.. எல்லாரும் விஜய் ஆகிட முடியாது.! அவரு ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம் தான் அரசியலுக்கு வந்தாரு.. நீ எங்க வீட்டுலயும் இல்ல, பக்கத்து வீட்டுலயும் இல்லை, பக்கத்து ஏரியாலயும் இல்ல.. முதல நீ நடிக்கிற படம் ஹிட் குடுக்குற வழிய பாரு..’’ என்று இப்போதே எகிறி அடிக்கிறார்கள்.

சபாஷ், சரியான போட்டி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link