அல்லக்கை காளியம்மாள்… சீமான் திரும்பவும் கடிச்சிட்டாரு.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட காளியம்மாளை, பிசிறு என்றும் அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் சீமான் பேசியதாக ஓர் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவை உட்கட்சி விவகாரம் என்று சொன்னாரே தவிர, பொய்யான ஆடியோ என்று மறுக்கவில்லை. அதன் பிறகு சீமானும் காளியம்மாளும் பல இடங்களில் சந்தித்துக்கொண்டாலும் இன்னமும் அவர்கள் உறவு சீராகவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அதோடு, பிரபாகரனை சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் சீமான் என்று சீமானை மேடையில் […]
அடேங்கப்பா…. பா.ஜ.க. மலைக்க வைக்கும் வசூல் வேட்டை

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளைக் கொண்டு பெரும் புள்ளிகளை மிரட்டுவதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரம் மூலம் ஒரே ஆண்டில் கூடுதலாக 1,800 கோடிக்கும் அதிகமாக கிடைத்திருக்கும் செய்தி அதிர வைக்கிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில்,, ஆளும் பா.ஜ.க.வுக்கு தன்னார்வ பங்களிப்புகள் 2022-2023 ஆண்டில் ரூ.2,120.06 கோடியிலிருந்து 2023-2024 ஆண்டில் ரூ.3,967.14 கோடியாக அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது. இதில், […]
எம்.ஜி.ஆர். சவுக்குடன் விஜய் ஆணையிட்டால்..? இன்று நிர்வாகிகள் சந்திப்பு கேன்சல்

‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ஏழைகள் வேதனைப்பட மாட்டார்’ என்று எம்.ஜி.ஆர். பாடிய ஸ்டைலில் விஜய் அடுத்த படமான, ‘ஜன நாயகன்’ அறிவிப்பு வெளியானது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்நிலையில், இன்று நடப்பதாக இருந்த நிர்வாகிகள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அரசியல் கட்சி தொடங்கிய விஜய் தன்னுடைய 69 ஆவது திரைப்படம் தான் கடைசி திரைப்படம் என்பதை அறிவித்து விட்டார். ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்துக்கு ‘ஜனநாயகன்’ என தலைப்பு வைத்ததுடன் […]
பிரபாகரனுக்கும் சீமானுக்கும் இம்புட்டுத்தான் உறவு… சாட்சி சொல்லும் ஒளிப்பதிவாளர்

விடுதலைப்புலிகளின் ஒரே நம்பிக்கை என்றே நாம் தமிழர் சீமானை தமிழக இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவர் பெரியாரை விமர்சனம் செய்யத் தொடங்கியதும் காட்சிகள் மாறின. பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலியானது. அதனை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் ஒரு வெடிகுண்டு வீசினார். அடுத்ததாக பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன், “சீமான், பிரபாகரன் சந்திப்பு நடந்தது உண்மைதான். ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட […]
தமிழகத்தில் சாலை விபத்து மரணம் மளமள குறைவு… செல்போன் பேசிய 4.20 லட்சம் பேர் மீது வழக்கு… சங்கர் ஜிவால் ஆக்ஷன் ரிப்போர்ட்

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024ம் ஆண்டு சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. திட்டமிட்டு செயலாற்றி வருவதால், வரும் ஆண்டுகளில் விபத்துகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி நகர்வதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி அளித்திருக்கிறார். இதுதொடர்பாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் விடுத்திருக்கும் அறிக்கையில், “மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற சவால்கள் தொடர்ந்து இருந்தாலும் தமிழகம் முழுவதும் விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு ஆக்கபூர்வ நடவக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. […]
அஜித்துக்கு பத்ம பூஷண்… ஜன நாயகன் விஜய் வாழ்த்து சொல்ல மாட்டாரா..?

விஜய்யை விட அஜித் நாட்டு மக்களுக்காக அப்டியென்ன சேவையாற்றினார்… அவருக்கு எதுக்கு பத்ம விருது என்று விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துவந்த நிலையில் இன்று அவரது கடைசி படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டைக் கொண்டாடி வருகிறார்கள். திரைப்படம் மட்டுமின்றி டிரோன், ரேஸ் என்று பல விஷயங்களிலும் கவனம் செலுத்துபவர். அதோடு எந்தவித பின்புலமும் இன்றி சினிமாவுக்குள் வந்து தன்னுடைய விடாமுயற்சியால் இன்று விஸ்வரூப வெற்றியை பெற்று கோலிவுட்டின் தனிப்பெரும் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் அஜித்குமார். இவரது திரைப்பயணத்தில் […]
அண்ணாமலைக்கு மீண்டும் ஒரு சான்ஸ்.? தமிழக பா.ஜ.க.வில் உச்சகட்ட மோதல்

இம்மாத இறுதிக்குள் தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனம் நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு தமிழிசை செளந்தராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கடுமையாக போராடி வரும் நிலையில், மீண்டும் அண்ணாமலையை நியமிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தமிழக பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர்கள் நியமனம் நடைபெற்றது. போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருமே போட்டியின்றி நியமனம் செய்யப்பட்டுவிட்டார்கள். அடுத்தகட்டமாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தேர்வு நடக்கிறது. இந்த பதவிக்கு கடுமையான போட்டி இருந்தாலும், […]
சீமானின் பிக்காலிப்பயல் விமர்சனம்… அடுத்து பிரபாகரனை என்ன சொல்வார்..?

முன்பு பெரியாரை தங்கள் வழிகாட்டி என்று பெருமைப்படுத்திய சீமான் இப்போது பெரியாரை கடுமையாக அவமதித்து வருகிறார். இந்த விவகாரத்தில் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வெளியாகின. பிரபாகரன் உறவினரை சீமான் விமர்சனம் செய்தது வைரலாகிவருகிறது. பெரியார் எதிர்ப்பு நிலையைச் சீமான் எடுத்த பிறகு கடும் விமர்சனத்துக்கு ஆளானார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தது தான் தான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது கடும் சர்ச்சையை உருவாக்கியது. அதேநேரம், […]
வேங்கைவயல் டீட்டெய்ல்டு போலீஸ் ரிப்போர்ட். கூட்டணியை உடைப்பாரா திருமா..?

வேங்கைவயல் வழக்கு சவால் நிறைந்தது. கத்தி மீது நடப்பது போன்று காவல் துறை கையாண்டதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், ரத்த மாதிரி தராதது, டிஎன்ஏ டெஸ்ட்களுக்கு ஒத்துழைக்காமை மற்றும் உள்ளுர் ஊர் கட்டுக்கோப்பு ஊர் கட்டுப்பாடு என எக்கச்சக்க கட்டுப்பாடுகளைத் தாண்டி காவல் துறை குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறது. இதற்காக 87 செல்போன் டவர்களுக்கு உட்பட்ட 1லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து, 293 சாட்சிகளிடம் விசாரித்து, இதில் சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களின் மொபைல்களில் இருந்து அழிக்கப்பட்ட புகைப்படங்கள் […]
வேங்கை வயல் ஆதாரங்கள் வெளியானது எப்படி..? ஆவேசத்தில் திருமாவளவன்

வேங்கை வயல் விவகாரத்தில் இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று பல கட்சிகள் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டிவந்த நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. செல்போனில் அழிக்கப்பட்ட காட்சிகள் மீட்டெடுக்கப்பட்டதாக ஆடியோ, வீடியோ, புகைப்பட்டங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலும், சிபிஐ விசாரணை கேட்டு திருமாவளவன் ஆவேசம் காட்டியிருக்கிறார். அதேநேரம், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஆடியோ, வீடியோ வெளியானது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் வழக்கு, அண்ணா நகர் சிறுமி […]

