பழனிசாமிக்கு இரட்டை மிரட்டல்? பா.ஜ.க. வலையில் விழுவாரா?

மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டும் ஆயுதங்களாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை இயங்கிவரும் நிலையில், தேர்தல் ஆணையமும் மோடிக்கு ஆதரவாகவே இயங்குகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை விசாரணையை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது எடப்பாடி பழனிசாமியை அதிர வைத்திருக்கிறது. அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் திரு கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன், மதுரை காந்தி ஆகியோரது மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரித்து […]
பிரசாந்த் கிஷோர் ரீல் அந்துபோய் ரொம்ப நாளாச்சு. வெளுத்துக்கட்டும் நாம் தமிழர்கள்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்திய பிறகு, விஜய்க்கு வரும் 2026 தேர்தலில் 15 – 20% வாக்குகள் கிடைக்கும் என்று தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியதாக அவரது நிர்வாகிகள் குஷியாகிறார்கள். மேலும், விஜய் நேரடியாக களத்தில் இறங்கும்போது 30% ஆகும் என்றும் தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் மற்றும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றத்தை விரும்புபோர் வாக்கும் சேரும்பட்சத்தில் 40% மேலாக வாங்கி தனிப்பெரும் கட்சியாகி […]
ஜாதிக் கட்சிகளை ஒன்று திரட்டும் அன்புமணி. பா.ஜ.க. கூட்டணி அசைன்மென்ட்

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க டாக்டர் ராமதாஸ் விரும்பும் நிலையில் பா.ஜ.கவுடன் தொடரவே அன்புமணி ஆசைப்படுகிறார். அதற்கு முன்னோட்டமாகவே ஜாதிக்கட்சிகளை எல்லாம் வளைத்துப் போட்டிருக்கிறார் என்று பேச்சு எழுந்துள்ளது. நாடு முழுக்க மதம் ரீதியாக மக்களை ஒன்று திரட்டி, மதக்கலவரத்தைத் தூண்டி ஆட்சிக்கு வருவது பா.ஜ.க. ஸ்டைல். அது தமிழகத்தில் எடுபடவில்லை என்று ஜாதி ரீதியாக ஒன்று திரட்டுவதற்கு முயற்சி செய்தது. டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோரைக் கொண்டு மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வி […]
விஜய் பல்ஸ் பார்க்கிறாரா பிரஷாந்த் கிஷோர்..? தைப்பூச வாழ்த்து சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியிருப்பது பல்வேறு யூகங்களைக் கிளப்பியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கும் பிரசாந்த் கிஷோர் இப்போது விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த நிலையில் தைப்பூசத்துக்கு விஜய் கூறியிருக்கும் வாழ்த்துச் செய்தியும் கடும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இன்று நடிகர் விஜய் தைப்பூசத்தை முன்னிட்டு, ‘’தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்!’’ […]
ஆளுநர் ரவிக்கு பளார் பளார் கேள்விகள். தீர்ப்பு என்னாகும்..?

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பொதுவாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு வழக்கறிஞர்கள் தான் வாதங்களை வைப்பார்கள். ஆனால்,ஆளுர் ரவி விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே அவருக்கு எதிராக வாதங்களை வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘’காரணம் எதுவும் தெரிவிக்காமல் மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநர், ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்; அது எப்படி முடியும்? […]
செங்கோட்டையனுக்கு என்னாச்சு.? அ.தி.மு.க. உடைப்பு வேலை ஆரம்பமாகிறதா..?

அத்திகடவு அவிநாசி திட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது மட்டுமின்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று நேரடியாக எடப்பாடி பழனிசாமியை குற்றம் சொல்லும் விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்துப் பேசிய செங்கோட்டையன், ‘’அத்திகடவு அவிநாசி திட்டம் புரட்சிதலைவி அம்மா கொண்டுவந்தது அவரின் படம் இல்லை என்பதால் நான் கலந்துகொள்ளவில்லை, இதை புறக்கணிப்பு என்று கூறக்கூடாது. இந்த திட்டத்துக்கு எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே காரணம்’’ என்று செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். தன்னைவிட ரொம்பவும் ஜூனியரான எடப்பாடி முதல்வர் ஆனபோது […]
டெல்லியில் கம்யூனிஸ்ட் கட்சி அட்டகாச சாதனை. டக் அவுட் ராகுல் செம ஹேப்பி

தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி டக் அவுட் ஆகியிருக்கிறது. இதனால் கடுமையான வருத்தத்தில் இருக்கும் ராகுல் காந்திக்கு ஆறுதல் கொடுப்பது போல் செய்தி வந்திருக்கிறது. அதாவது, டெல்லியில் போட்டியிட்ட 70 தொகுதிகளிலும் சேர்த்து ஐந்தாயிரம் ஓட்டுக்கள் கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் வாங்கவில்லை என்பது தான் அந்த ஆறுதல் செய்தி. இந்திய அரசியலை புரட்டிப்போட கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் வீரவசனம் பேசுகிறார்கள். ஆனால், […]
விடாது சவுக்கு. திரும்பத் திரும்ப விரட்டுறாங்க

ஸ்டாலினை நிம்மதியாக இருக்க விட மாட்டேன். ஆளும் தி.மு.க. அரசின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்திக்கொண்டே இருப்பேன் என்று சமூகவலைதளங்களில் பேசியதால் காவல் துறை மூலம் குண்டர் சட்டம் போடப்பட்டு, இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் சவுக்கு சங்கர். இப்போது மீண்டும் அவரை குறி வைத்து காவல் துறை பழிவாங்குவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். சவுக்கு சங்கரது பதிவில், ‘’பழிவாங்கும் போக்கில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அருண். கட்டுப்பாடிழந்த முதல்வர். கும்பமேளாவில் படபிடிப்பு நடத்துவதற்காக, சவுக்கு மீடியா கேமராமேன்களோடு சாலை மார்க்கமாக […]
டெபாசிட் பரிதாபங்கள். தனியே நின்றாலும் ஜெயிக்க மாட்டாரா சீமான்..?

ஈரோடு இடைத்தேர்தலில் அத்தனை எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல் பின் வாங்கி விட்டன. புதிதாக வந்த விஜய்யும் போட்டியில்லை என்று அறிவித்தார். அதனால் தி.மு.க.வை எதிர்கொண்ட நாம் தமிழர் சீமான் கணிசமான வாக்குகளைப் பெற்று கடும் போட்டி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வழக்கம் போல் இந்த தேர்தலிலும் டெபாசிட் பறி கொடுத்திருக்கிறார். தேர்தல் முடிவின் படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நாம் […]
மாணவி ஸ்ரீமதியின் தாயார் முதல் குற்றவாளி..? வேங்கைவயல் பாணியில் கள்ளக்குறிச்சி

வேங்கைவயல் குற்றபத்திரிகைக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கிலும் யாரும் எதிர்பாராத வகையில், மாணவியின் தாயார் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருப்பது அதிர்வை உண்டாக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். இதையடுத்து நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. மாணவியின் மரணத்திற்கு […]

