News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

எடப்பாடியுடன் விஜய் கூட்டணி அம்பலம்…? அய்யநாதன் பேச்சுக்கு த.வெ.க. கப்சிப்

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு ஆலோசனை நடத்திய காலம் தொடங்கி அவருடன் நெருக்கமாக இருந்தவர் அய்யநாதன். அவர் விஜய் கூட்டணி குறித்து வெளிப்படையாகப் பேசிய விவகாரம் அவரது கட்சியினரை அதிர வைத்திருக்கிறது. கடந்த ஜனவரி 2ம் தேதி விஜய்யுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து அய்யநாதன், ‘’அ.தி.மு.க.வுடன் கூட்டணி சரியா வராது. ஒன்னு எடப்பாடிய நீங்க ஏத்துக்கணும், இல்ல உங்கள முதல்வர் வேட்பாளரா அதிமுக ஏத்துக்கணும் ரெண்டும் நடக்காதுன்னு சொல்லியிருக்காரு அதுக்கு விஜய் இரண்டாவது ஆப்ஷனுக்குத் தான் வொர்க் […]

ஆம் ஆத்மியை தோற்கடித்தது ராகுல் காந்தி..? ஊழலில் தொடங்கி ஊழலில் முடியும் கட்சி

டெல்லி காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டு என்ற கோஷத்துடன் களத்தில் இறங்கி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி அடைந்த ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே தோல்வி அடைந்துள்ளது. ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் கட்சி கை கொடுக்காத காரணத்தாலே இந்த தோல்வி என்றும், இதற்கு ராகுல் காந்தியே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். அதேநேரம் காங்கிரஸ் கட்சியின்ர், ‘’டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 சதவீத அளவுக்கு வாக்குகள் பெற்றுள்ளது. கடந்த கோவா, […]

விஜய் முதல் கூட்டணிக் கட்சி இது தானா..? அப்பா பைத்தியம் ரங்கசாமி அறிவிப்பு

விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் முழு தொடர்பில் இருந்தார். புஸ்ஸி ஆனந்த் இவர்களுடைய சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இவர்கள் இணைவரும் இணைந்து புதுவையில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கபட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், ‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் போட்டியிடும்’ என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்து இருக்கிறார். புதுச்சேரியில் என்ஆர். காங்கிரஸ் கட்சியின் 15-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கிழக்கு கடற்கரைச்சாலையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் […]

சீமானும் விஜய்யும் கூட்டாளிகளா..? சென்சஸ் மோடிக்கு பாதுகாப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம், கும்பமேளா மரணம், அமெரிக்காவில் இருந்து விலங்குடன் இந்தியர்கள் திருப்பப்பட்ட அவமானம் ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்காத நடிகர் விஜய் திடீரென ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்று மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரைப் போலவே சீமானும் இந்த விஷயத்துக்கு மட்டும் குரல் கொடுத்திருக்கிரார். சீமானுக்கும் விஜய்க்கும் இடையில் மிகப்பெரும் யுத்தம் நடப்பதாக அவர்களுடைய கட்சியினர் சண்டை போட்டு வரும் நேரத்தில், இருவரும் சொல்லிவைத்தது போன்று ஒரே நேரத்தில் ஒரே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரே […]

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி..? ஜெயிலுக்குப் போகும் அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடித்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாளை முடிவுகள் வெளிவர இருக்கும் நிலையில், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலுக்குப் போவதை யாராலும் தடுக்க முடியாது.   70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குப் […]

இந்தியர்களுக்கு கை விலங்கு, கால் விலங்கு. விஸ்வகுரு மோடிக்கு வீரம் இல்லையா?

இந்தியர்களை கை, கால்களில் விலங்கு போட்டு அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பிய விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் வெடித்தது. அமெரிக்காவிலிருந்து கை விலங்கிட்டு அழைத்து வரப்பட்டவர்கள் கைதிகள் அல்ல மனிதர்கள் என களத்தில் இறங்கி மோடி அரசுக்கும் டிரம்ப அரசுக்கும் எதிராக ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். அமெரிக்காவில் போதிய ஆவணங்கள் இல்லை என 104 இந்தியர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு சர்வதேச குற்றவாளிகளை கடத்துவது போல இந்தியாவிற்கு ராணுவவிமாஙஅனுப்பியுள்ளது அமெரிக்கா. சாப்பிடும் போது கூட […]

சீமானுக்கு நீதிமன்றத்தில் நச் குட்டு. அடேங்கப்பா சொத்துப் பட்டியல்

செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் அவ்வப்போது வில்லங்க வார்த்தைகள் பேசுவதுண்டு. அப்படி இன்று, ‘மண்டையை உடைச்சுடுவேன்’ என்று எகிறினார். இந்த நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்து விட்டது. கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை […]

அண்ணா பல்கலை விவகாரத்தில் பத்திரிகையாளர்களுக்கு செம வெற்றி… நீதிமன்றம் சொன்னது என்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அண்ணா தி.மு.க. தொடங்கிவைத்த, ‘யார் அந்த சார்?’ என்ற விவகாரத்தை திசை திருப்பும் வகையில் பத்திரிகையாளர்களிடம் செல்போனை வாங்கிவைத்து, தொடர் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் துறை நெருக்கடி கொடுத்தது. இந்த நெருக்கடிக்குப் பணியாமல் நீதிமன்றத்தில் போராடிய பத்திரிகையாளர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை […]

மீண்டும் வெடித்தது சாம்சங் போராட்டம். மூடப்பட்ட டாய்லட்

கடந்த வாரம் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டது. இதை தொழிலாளர்களும் பின்னிருந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களும் அட்டகாசமாக கொண்டாடின. தொழிற்சங்கப் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி என்று அறிவித்தார்கள். இந்நிலையில் மீண்டும் சாம்சங் நிறுவனத்தில் இன்று உள்ளிருப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. சாம்சங் நிர்வாகத்தின் அராஜகம் தொடர்வதால் இன்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதாகத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அராஜகத்தை திமுக அரசு வழக்கம் போல வேடிக்கை மட்டுமே பார்க்கிறது என்று கொதித்துள்ளனர்.  தொழிற்சங்கம் அமைத்தற்காக சங்க நிர்வாகிகள் மூன்று […]

புனித நீராடும் மோடி… கும்பமேளா மரணங்கள் மறைக்கப்படுகிறதா..?

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடுகிறார். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியின் கும்பமேளா புனித நீராடல், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதேபோல் இமயமலை தியானம், கன்னியாகுமரி தியானம், ராமர் கோயில் திறப்பு, புனிதநீராடல் என்று முழுக்க முழுக்க மதத் தலைவராக மோடி செயல்படுகிறார் என்றும் குற்றம் […]