News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி சீக்ரெட்… வேலூரில் மெகா உற்சாகம்

வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் லட்சிய மாநாட்டிற்கு வந்த இ.பி.எஸ்க்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. ஏகப்பட்ட இளம் பெண்கள், இளைஞர்கள் மத்தியில், ‘அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், இருமொழி கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது’ என்றும் இ.பி.எஸ் திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன் வரும் 2026 தேர்தல் கூட்டணி பற்றியும் பேசியிருக்கிறார். வேலூர் மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக […]

மும்மொழிக் கொள்கை திணிப்பு… மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்..?

மும்மொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுப்பிய கேள்வியால் தமிழகம் முழுக்க பற்றி எரிகிறது. தேசிய கல்விக்கொள்கை என்ற பேரில் இந்தியை திணிக்க பல வழிகளிலும் முட்டுக்கட்டை போடுவதுடன் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 2000 கோடியை கொடுக்காத பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின், “They have to come to the terms of the […]

சீமானுக்கு சேதாரம்… பிரபாகரன் படத்துக்குத் தடை..?

ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பிறகு இந்தியாவில் எல்.டி.டி.இ. இயக்கம் தடை செய்யப்பட்டது. அதேநேரம், எல்.டி.டி.இ. இயக்கத் தலைவர் பிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்துவதற்கும் தடை இருக்கிறது. ஆனால், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் தொடர்ந்து எல்லா மேடைகளிலும் பிரபாகரன் படத்தை பயன்படுத்தி வந்தனர். மத்திய பா.ஜ.க. ஆதரவு இருப்பதாலே இதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ  தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் […]

எலான் மஸ்க், இவ்வளவு குசும்பு உடம்புக்கு ஆகாது. மோடி மீட்டிங் வைரல்

இந்தியாவில் பிரதமர் மோடிக்கு அதானி எப்படி நெருக்கமான நட்போ,அப்படித்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பும் எலான் மஸ்க்கும் பிரிக்கமுடியாத கூட்டாளிகள். தமிழக மக்களுக்குப் புரியும் வகையில் சொல்வது என்றால் ஜெயலலிதாசசிகலா கூட்டணி போன்றது. அமெரிக்காவுக்குப் போயிருக்கும் இந்தியப் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறைஅமைச்சர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உள்ளிட்டமிகப்பெரும் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பில் எல்லான் மஸ்க் அவரது குழந்தைகளை கூட்டிட்டுவந்து மீட்டிங்கை நடத்தி இருப்பது பெரும் வைரலாகிவருகிறது. ’எப்புடினாலும் பாட்டி வடை சுட்டா […]

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் ருத்ரதாண்டவம். நிதிக்குப் பதிலாக ஜல்லிக்கட்டு?

தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்பிய குரலுக்கு மத்திய நிதியமைச்சர் சம்பந்தமே இல்லாமல் ஆவேசமாக ஜல்லிக்கட்டு விவகாரத்தை எழுப்பி விவகாரத்தை திசை திருப்பியிருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இன்று நிர்மலா சீதாராமன், ‘’தி.மு.க.வினர் வேண்டுமென்றே பழி சுமத்துகிறார்கள். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்தது, அதற்கு தி.மு.க. சைலன்ட் பார்ட்னராக இருந்தது’ என்று பேசினார். அதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததும் தமிழ் மொழியிலே […]

விஜய்க்குப் பாதுகாப்பு… சீமானுக்கு ஜெயில்..?

அஜித் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள், உடன்பிறப்புகள், நாம் தமிழர் தம்பிகள் ஆகியோருடன் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு ரஜினி ரசிகர், ‘விஜய் வெளியே வந்தால் முட்டை அடிப்போம்’ என்று கூறியதை அடுத்து உடனடியாக அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது ஆயுதம் தாங்கிய 8 -11 சிபிஆர்எஃப் வீரர்கள், காவல்துறை படையினர் ,தமிழகம் முழுவதும் விஜய்க்கு பாதுகாப்பு […]

டெல்லிக்குப் போகும் கமல்ஹாசன், பிரேமலதா… வைகோவுக்குக் கல்தா

தமிழகத்தில் வரும் ஜூலை 24ம் தேதி 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் தி.மு.க. சார்பில் கமல்ஹாசனும் அ.தி.மு.க. சார்பில் பிரேமலதாவும் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது எம்.பி.யாக இருக்கும் வைகோவுக்கு தி.மு.க. மீண்டும் வாய்ப்பு வழங்கப்போவதில்லை என்றும் தெரியவருகிறது. மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக் காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடைகிறது. அந்த வகையில் 2025, […]

பேய்க்கும் பேய்க்கும் சண்டை. சீமான் தம்பிகளுடன் விஜய் ரசிகர்கள் மோதல்

விஜய் கட்சியின் தேர்தல் வியூக ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என்று தெரியவந்திருக்கும் நிலையில், பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தேர்தல் வியூகம் தேவைப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கருத்து தெரிவித்தார். இதையடுத்து இரண்டு பக்கமும் ;பற்றி எரிகிறது. செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் சீமான், ‘’தமிழகத்தில் மக்களுடன் கூட்டணிவைத்து தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுகிறேன். ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றிருக்கிறது. விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பான யூகங்களில் எனக்கு நாட்டமில்லை. […]

கைது ஆவாரா கஞ்சா கருப்பு..? அமைச்சர் பகிரங்க மிரட்டல்

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருநதன. திமுக ஆட்சியில் சரியில்லை. செத்த பிணத்துக்கு சிகிச்சை பார்க்கிறார்கள் என்றெல்லாம் வீடியோ போட்டு வைரல் செய்த நடிகரும் அ.தி.மு.க. உறுப்பினருமான கஞ்சா கருப்புக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். நடந்த சம்பவம் குறித்துப் பேசும் நடிகர் கஞ்சா கருப்பு, ‘கால் வலி படுத்தி எடுத்திட்டிருந்தது. அதனால போரூர்ல இருக்கிற இந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன். ஆஸ்பத்திரின்னாலே எமர்ஜென்சிக்காகத்தான் வருவாங்க. அதனாலதான் 24 மணி நேரமும் அது […]

விஜய் கட்சியின் குழந்தைகள் அணி தலைவர் யார்..? அண்ணாமலை கிண்டல்

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் சமூகவலைதளத்தில் பரபரப்பாகிவருகிறது. இதில் மூன்றாம் பாலினத்தவர், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. திருநர் அணியும் குழந்தைகள் அணியும் படு சர்ச்சையாகியுள்ளன. திருநர் அணி என்பதை 9வது எண் பட்டியலில் சேர்த்து வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறார் விஜய் என்று லிவிங் ஸ்மைல் வித்யா கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இதற்கு விஜய் கட்சியினர் அவரை தி.மு.க.வை […]