News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

என்னாது திருமாவளவனும் இந்தி ஸ்கூல் நடத்துகிறாரா..? அடுத்த எக்ஸ்போஸ்

இரட்டை மொழி மட்டுமே போதும் என்று நடிகர் விஜய் குரல் கொடுத்ததும் அவர் நடத்தும் பள்ளியில் மும்மொழிக் கொள்கை இருக்கிறது என்று அண்ணாமலை ஆவணம் வெளியிட்டார். அதேபோன்று விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனுக்கு எதிராகவும் புதிய ஆவணத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை, ‘’திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star […]

அண்ணாமலைக்கு இந்த அவமானம் தேவையா..? டிரெண்டிங்கில் கெட் அவுட் மோடி

தமிழ்நாட்டுக்கு நிதி தரமுடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘’தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக் கொடுத்துள்ளது. மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்க முடியும் என மத்திய அமைச்சர் மிரட்டுகிறார். உங்க அப்பன் வீட்டு காச கேக்கல. பிச்சை கேக்கல. கடன் கேட்கவில்லை. தமிழ்நாடு மாணவர்களின் பெற்றோர் கட்டிய […]

விஜய் கட்சிக்கு நோஸ் கட். முதல் கூட்டணிக் கட்சி பல்டி

கூட்டணி ஆட்சிக்கு நாங்கள் ரெடி என்று விஜய் கொடுத்த அறிவிப்பினால், ஏகப்பட்ட கட்சிகள் படையெடுத்துவருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. திருமாவளவனுக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் குறி தவறிய நிலையில், முதல் கூட்டணிக் கட்சியாக இணைந்த முஸ்தபாவும் திடீரென பின்வாங்கியிருப்பது, விஜய் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தஃபா விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், 2026ல் த.வெ.க உடன் இணைந்து தேர்தலை முஸ்லீம் லீக் சந்திக்கும் என்றும் இஸ்லாமியர்களை […]

கும்பமேளா அழுக்குத் தண்ணீரில் குளிக்காதீங்க… எச்சரிக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா திருவிழாவையொட்டி ஆறு வாரங்களுக்கு, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (வேத, புராணங்களில் கூறப்படும் நதி, பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படுகிறது) ஆகிய புனித நதிகளில் நீராடுவதற்கு இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து சேர்கிறார்கள். இந்த நாட்களில் கும்பமேளாவின் போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்குகிறது, ஆன்மாவை தூய்மைப்படுத்துகிறது, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை அடைய உதவுகிறது என்று நம்பி கூட்டம் கூட்டமாக வந்து குவிகிறார்கள். […]

தயிர் சாதம் நிர்மலா சீதாராமனுக்கு நல்லி எலும்பு வேல்முருகன் எச்சரிக்கை… கதறும் பா.ஜ.க.

மும்மொழி கொள்கைக்கு எதிராக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ’’தயிர் சாதம் சாப்பிடும் உங்களுக்கே இவ்வளவு கோபம் வந்தால்.. நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?’’ என்று பேசிய விவகாரம் தமிழக பா.ஜ.க.வினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக […]

விவசாயத்தை அழித்து விஜய் ஸ்கூல் கட்டினாரா..? யார் அந்த பினாமி..?

மோடி அரசின் மும்மொழிக் கொள்கையை விஜய் விமர்சனம் செய்த காரணத்தால், விஜய் பள்ளிக்கூட ஆதாரத்தை வெளியிட்டு புதிய பரபரப்பை உருவாக்கியிருக்கிறார் அண்ணாமலை. விவசாயத்தை அழித்து பள்ளி கட்டியிருப்பதாகவும் பினாமி மூலம் வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார் கூறப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘’நடிகர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஒரு சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்று. பதூர் என்ற இடத்தில் அந்த பள்ளி […]

ராஜேந்திர பாலாஜிக்கு சிபிஐ சம்மன், கைது..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

  ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பி கைது செய்ய இருப்பதாக வெளிவரும் தகவல்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க. தரும் நெருக்கடியாகவே கருதப்படுகிறது. அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர்  விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகரான விஜயநல்லத்தம்பி என்பவர் மூலமாக 33 பேரிடம் ரூ.3 கோடி […]

ராகுல் எதிர்ப்பை மீறி தேர்தல் கமிஷனர் நியமனம். அமித்ஷா நண்பருக்குப் பதவி பரிசு

ராமஜென்ம பூமி அறக்கட்டளையில் முக்கியப் பங்கு வகித்தவரும் அமித்ஷாவுக்கு நெருக்கமான நண்பராகக் கருதப்படுபவருமான ஞானேஷ்குமார் புதிய தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்தல் கமிட்டி புதிய தலைவரை தேர்வு செய்வதற்குக் கூடியது.  புதிய நியமன நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, நியமனத்தை ஒத்திவைக்குமாறு […]

முடிஞ்சா என்னை சிறையில் போடுங்க… ஸ்டாலினுக்கு சீமான் சவால்

எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள், நாங்கள் அதனை எதிர்கொள்வோம். கைதுக்கு நான் அஞ்சுகிற ஆளா..? விசாரணைக்கு ஆஜராக நான் பயப்படவில்லை. எல்லா வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்றிக்கொள்வோம் என்று சீமான் பேசிய விவகாரம் வைரலாகிவருகிறது. சீமான் தொடர்ச்சியாக பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். அவரின் பேச்சை கண்டித்து திராவிட அமைப்புகள், பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். தமிழகத்தில் மொத்தம் 70-க்கும் […]

விஜய் குடும்பத்தை வம்பிழுக்கும் பா.ஜ.க… மும்மொழிக் கொள்கை மோதல்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் எதிர்ப்பு அறிக்கை கொடுத்தார் நடிகர் விஜய். இதையடுத்து பா.ஜ.க.வினரும் தி.மு.க.வினரும் ஒரே நேரத்தில் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் விஜய் குடும்பத்தை நேரடியாகவே பா.ஜ.க. வம்புக்கு இழுத்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரான ஹெச்.ராஜா, `தவெக தலைவர் விஜய்யின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் விஜய் போன்ற அனைத்து அரசியல்வாதிகளும் உங்கள் பிள்ளைகள் எங்கு படித்தாலும் அங்கிருந்து நிறுத்தி அரசுப் பள்ளியில் சேர்க்க தயாரா?’’ என்று […]