News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய் கட்சியில் நாளை இணையப் போவது யார்..? நட்சத்திர விடுதி சொகுசு விழாவால் ரசிகர்கள் ஏமாற்றம்

த.வெ.க.வின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவில் நடிகர் விஜய்யை மீண்டும் நேரில் சந்திக்கலாம் என்று ஆசைப்பட்ட ரசிகர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள். சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பது தெரியவந்துள்ளது. இந்த விழாவில் ஒரு முக்கியப் பிரபலம் கட்சியில் சேர்வதற்கு விருப்பம் காட்டியதாகவும், அதற்கு விஜய் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க.வின் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் நடிகர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். அதன் […]

மோடி ஆதரவாளர்களுக்கு தரமான பரிசுகள். இந்தியாவுக்கு நல்ல காலமா..?

ரிசர்வ் வங்கி ஆளுநராக 6 ஆண்டுகள் பதவி வகித்த சக்திகாந்த தாஸ் இந்திய பிரதமர் மோதியின் 2வது முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செய்தி நடுநிலை அரசியல் விமர்சகர்களை அதிர வைத்திருக்கிறது. அதேபோல் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் நியமனமும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. நாட்டின் முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்கல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொண்டால், ஓய்வு காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு உயர் பதவி கொடுத்து அழகு பார்ப்பது பா.ஜ.க.வின் அஜெண்டாவாக இருந்துவருகிறது. அப்படித் தான் ராமர் கோயில் விவகாரத்தில் […]

காளியம்மாளுக்கு நாம் தமிழரில் பட்டிமன்றம். உறுதியான முடிவில் சீமான்

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் வெளியேறலாம் என்பதை நேரடியாகவே மீடியாவிடம் தெரியப்படுத்திவிட்டார் சீமான். ஆனாலும், காளியம்மாள் இன்னமும் எந்த முடிவும் அறிவிக்காமல் அமைதி காக்கிறார். இந்த நிலையில் சீமான் நிலைப்பாடுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கட்சிக்குள் எக்கச்சக்க முட்டல் மோதல் நடக்கிறது. காளியம்மாளுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், ‘’காளியம்மாள் கட்சியில் ஏதும் தவறு செய்திருந்தால் வள்ளுவம் சொல்வது போல நேரடியாகக் கடுமையாகச் சாடியிருக்கலாம்.  காளியம்மாளால் சிக்கல் ஏதும் உண்டாகியிருந்தாலோ, அல்லது காளியம்மாளைப்பற்றி துரைமுருகனிடம் பேசியதால் சிக்கல் எழுந்திருந்தாலோ அதனைத் […]

ஆண்டவருக்கு இந்த அவமானம் தேவையா? விஜய் ரசிகர்கள் செம கலாய்

  தனிக் கட்சி தொடங்கி அதை கரையேற்ற முடியாமல் தி.மு.க. ஆதரவாளராக மாறியிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு இந்த ஆண்டு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில் சினிமா ரசிகர்கள் குறித்து அவர் பேசிய பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘’நான் தன்னம்பிக்கையுடன் உயிர்த்து இருக்க தமிழ்நாடு மக்கள் தான் காரணம். தமிழே என்று நான் […]

தமிழ் எங்கே அண்ணாமலை..? கேந்திர வித்தியாலயா தில்லுமுல்லு

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், தமிழ்நாடு அரசு மொத்தமாக 5 ஆயிரம் கோடி ரூபாயை இழக்க நேரிடும் எனவும், திமுக தலைமையிலான அரசு மாணவர்களின் கல்வியை வைத்து அரசியல் செய்வதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி வருகிறார். அதேநேரம், உலகின் மூத்த மொழியான தமிழை பிரதமர் மோடி போற்றுவதோடு, உலகம் […]

அன்புமணிக்கு எம்.பி. பதவி…? ஓநாய், வெள்ளாடு இபிஎஸ் பாய்ச்சல் பின்னணி

ஓநாடு, வெள்ளாடு ஒன்றாக இருக்க முடியுமா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பதற்குப் பின்னால் அன்புமணிக்கு எம்.பி. சீட் கொடுக்கும் ரகசியம் இருப்பதாக அ.தி.மு.க.வினர் கதிகலங்கி நிற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி எழுதிய கடிதத்தில், ’’தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், காங்கிரஸ்-திமுக கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கொடுத்தும்; மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக […]

காளியம்மாளை சேர்க்காதீங்க… விஜய்க்கு எக்கச்சக்க நெருக்கடி

நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு இணையாக காளியம்மாளுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்று ஒரு பேச்சு எழுந்ததாலே, அவரை பிசிறு என்று மட்டம் தட்டினார் சீமான். அதன் பிறகு சீமானுடன் காளியம்மாள் மீட்டிங் நடந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படவில்லை. இந்த நிலையில் விழா அழைப்பிதழ் ஒன்றில் காளியம்மாளின் பெயர், நாதக பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் என்று இல்லாமல், சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரே நாம் தமிழர் பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியைக் குறிப்பிட வேண்டாம் […]

பாலியல் வழக்கில் சீமான் கைது உறுதி..? அண்ணி ஆவாரா விஜயலட்சுமி..?

வீடியோவாக மட்டும் சீமானுடன் மோதிக்கொண்டிருந்த நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் மிகவும் வில்லங்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டுர் இருக்கிறது. இந்த விஷயத்தில் விஜயலட்சுமியால் மட்டுமே சீமானைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில், மீண்டும் அவரை தாஜா செய்யும் வேலையை தம்பிகள் செய்துவருவதாக சொல்லப்படுகிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ச்சியாக பல்வேறு பாலியல் புகார் கூறிவந்தார். தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தார், கருக்கலைக்க வைத்தார் என்றெல்லாம் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் […]

விஜய் கட்சியில் மருது அழகுராஜ்.? என்ன எதிர்பார்க்கிறார்..?

எடப்பாடி பழனிசாமியின் ஆளாக நின்று தேர்தலில் தோற்றுப் போனவர் முன்னாள் பத்திரிகையாளரான மருது அழகுராஜ். பணம் தருவதாகச் சொல்லி ஏமாற்றி என் வீட்டை விற்பனை செய்ய வைத்து என்னை ஓட்டாண்டி ஆக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று ஓ.பன்னீர்செல்வம் பக்கம் பாய்ந்தார். இவர் அதிகாரபூர்வமாக விஜய் கட்சியில் சேர்வதற்கு துட்டு எதிர்பார்க்கிறாராம். பன்னீர் அணியில் சேர்ந்ததும் இவருக்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கப்பட்டது. ஆனால், அந்த பத்திரிகையை நடத்தவும் மருது அழகுராஜால் முடியவில்லை. அவரது செலவுக்குப் பணம் கொடுத்து பன்னீருக்கு […]

அன்புமணிக்கு என்னாச்சு..? பா.ஜ.க.வை காப்பாற்ற போராட்டம்?

இந்தித் திணிப்பு, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழகம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. நிவாரண நிதி தராமல் மோடி அரசு தமிழகத்தைப் புறக்கணித்துவருகிறது. இந்த விவகாரங்களுக்காக தி.மு.க. கூட்டணியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அடித்து விளையாட வேண்டிய நேரத்தில் சம்பந்தமில்லாமல் பா.ஜ.க. மீதுள்ள பற்றையும் அன்பையும் காப்பாற்றுவதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்புப் போராட்டம் நடத்துவதாக அவரது கட்சியினரே வருத்தப்படுகிறார்கள். அதோடு அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், […]