பிரேமலதா முதுகில் குத்தினாரா எடப்பாடி பழனிசாமி..? மக்களுடன் கேப்டன் மகன் பயணம் ஆரம்பம்

கடந்த பிப்ரவரி மாதம் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்தபோதே உறுதி செய்யப்பட்டது என்று பேசியிருந்தார். அதற்கு அப்போது அ.தி.மு.க. தரப்பில் எந்த பதிலும் சொல்லப்படவில்லை.’’ நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘’தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று நாங்கள் சொன்னோமா? யார் யாரோ சொல்வதை வைத்துக் கேட்காதீர்கள்’ என்று பிரேமலதா ஆசையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார். இதையடுத்து தே.மு.க.வினர் போர்க்கோலம் கொண்டுள்ளனர். சமூகவலைதளத்தில் ஆவேசம் காட்டி வருகிறார்கள். இதுகுறித்து தே.மு.தி.க.வினர், […]
விஜய்யைத் தடுத்து பாலிடிக்ஸ் செய்தாரா ஆதவ் அர்ஜூனா..? ஆவேசமாகும் ரசிகர்கள்.

முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சர்ப்ரைஸ் விசிட்டாக விஜய் ஆஜராக பிளான் வைத்திருந்தாராம். அப்படி விஜய் ஆஜராகி இருந்தால் ஒட்டுமொத்தக் கூட்டமும் மிரண்டு போயிருக்கும். அதோடு, அனைத்து மீடியாவும் விஜய்க்கு ஆதரவாக நின்றிருக்கும். இந்த நல்ல வாய்ப்பை ஆதவ் அர்ஜூனா தடுத்து நிறுத்தியதாக கட்சிக்குள் ஒரு பஞ்சாயத்து ஓடுகிறது. முதல்வர் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பார் என்று சொல்லப்பட்டுவிட்டாலும், அறிக்கை தயாரானதும் தானே இந்த விபரங்களை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிவிடுகிறேன் […]
எதிர்க் கட்சித் தலைவராக அசத்திய விஜய்… வைரலாகும் அறிக்கை… புலம்பும் ரசிகர்கள்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு ஸ்டாலின் கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நடிகர் விஜய் கட்ச்யின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டுள்ளார். அதேநேரம் தொகுதி மறு சீரமைப்பு குறித்து தெள்ளத் தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நடிகர் விஜய். எதிர்க் கட்சித் தலைவராக செயல்படுவார் விஜய் என்று சொல்லும் அளவுக்கு அந்த அறிக்கை செம வைரலாகிவருகிறது. விஜய் விடுத்துள்ள அறிக்கையில், ‘நம் அரசியல் சாசனத்தின் 84ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு […]
இரண்டு அரசியல் அனாதைகள் திடீர் சந்திப்பு. நடுரோட்டில் ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன்.

மிஸ்டர் பணிவு, மூன்று முறை முதல் அமைச்சர் என்றெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் மீது மக்களுக்குக் கொஞ்சம் மரியாதை இருந்தது. தர்மயுத்தம் என்று தொடங்கி சசிகலாவை அம்பலப்படுத்தப் போகிறேன் என்று சொன்னவர் அப்படியே பல்டி அடித்து மீண்டும் சசிகலாவின் அடிமையாக மாறினார். அவரும் அ.தி.மு.க.வை கைப்பற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விட்ட டிடிவி தினகரனும் திடீரென ரோட்டில் சந்தித்துப் பேசியது செம கலாய்க்கு ஆளாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்துகொண்டே கட்சிக்குள் தொடர்ந்து வம்பு வழக்கு என்று […]
விஜய்க்கு குல்லா, இப்தார் விருந்து… இப்படி பண்றீங்களே புரோ..?

அரசியலில் நாங்கள் மற்ற கட்சி மாதிரி இயங்க மாட்டோம். எங்க ரூட்டே தனியாக இருக்கும். என்று தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கும் நேரத்தில் மிகப்பெரிய பில்டப் கொடுத்தார் நடிகர் விஜய். அவர் மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே குல்லா போட்டுக்கொண்டு இப்தார் கஞ்சி குடிப்பதற்குத் தயாராகி இருப்பதைப் பார்த்து அவரது ரசிகர்களே கொதிக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 7ம் தேதி ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் […]
வேலுமணி வீட்டுக் கல்யாணமா… பா.ஜ.க. மாநாடா..? இபிஎஸ் எஸ்கேப் அரசியல்

கோவை ஈச்சநாரியில் அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான வேலுமணியின் மகன் விகாஸ் – தீக்ஷனா திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு பா.ஜ.க.வின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும், எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததும் ஏகப்பட்ட அரசியல் யூகங்களைக் கிளப்பியிருக்கிறது. வேலுமணி இல்லத் திருமண விழாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, நடிகை குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் ஏகப்பட்ட தலைவர்கள் வரிசையாக வந்து ஆஜரானார்கள். பா.ஜ.க. […]
விஜய்காந்த் சிலையா… குட்டிச் சாத்தானா..? பிரேமலதா அலப்பறைகள்

விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுக்கு எல்லாம் பிரேமலதா அன்புக்கட்டளை போட்டிருக்கிறார். அதாவது, அவரவர் ஏரியாவில் விஜயகாந்திற்கு சிலை ஏற்பாடு செய்ய வேண்டும். அதனை நானே திறந்து வைப்பேன். சிலை வைக்காத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்று நெருக்கடி கொடுக்கிறாராம். இதையடுத்து அவரது நிர்வாகிகள் அவர்களால் முடிந்த வரை செலவு செய்து விஜயகாந்திற்கு அவர்களுடைய சொந்த இடத்தில் குட்டிக் குட்டி சிலைகளை உருவாக்கிவருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணத்தில் பிரேமலதா திறந்த விஜயகாந்த் உருவச் சிலை கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. ஏனென்றால், அந்த […]
சீமான் மாமா…. நான் விருப்பப்பட்டு வர்றேன்… எவ்வளவு குடுப்பீங்க? வரிசை கட்டும் அழைப்புகள்.

அவ விருப்பப்பட்டு வந்தாள் என்று விஜயலட்சுமியை பாலியல் தொழிலாளி ரேஞ்சுக்கு சீமான் பேசிய விவகாரம் பெரும் வில்லங்கமாகியிருக்கிறது. கண்ணீரும் கம்பலையுமாக விஜயலட்சுமி, ‘நான் பாலியல் தொழிலாளியா?’ என்று நியாயம் கேட்கிறார். இந்த நிலையில், விருப்பப்பட்டு ஒரு பெண் கூப்பிட்டதும் போகிறார் என்றால் சீமானும் பாலியல் முதலாளியா..? நானும் விருப்பப்படுகிறேன், சீமான் ரெடியாக இருக்கிறாரா என்று எக்கச்சக்க பேர் சீமானுக்குப் போன் போடுகிறேன். ‘மாமா… நான் விருப்பப்பட்டு வர்றேன், எங்க வரணும், எப்படி வரணும், என்ன செய்வீங்க, எவ்வளவு […]
மோடியின் கச்சத்தீவு மீட்பு.? மீனவர்கள் கடத்தல்காரர்கள்..? ஆளுநர், அண்ணாமலை சூப்பர் டிராமா

மோடியின் ஆட்சியில் தமிழக மீனவர்களை தொட்டுப் பார்க்கும் தைரியம் கூட இலங்கைக்கு வராது என்று பா.ஜ.க.வினர் உறுதி அளித்தார்கள். ஆனால், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்கக் கோரியும், கைது நடவடிக்கையை நிறுத்தவும் மீனவர்கள் போராட்டம் செய்துவருகிறார்கள். இந்த போராட்டத்தினரை சந்தித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘’ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். […]
பிரசாந்த் கிஷோர் செல்வதெல்லாம் உண்மையா…? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு மாநாட்டில் மேடையேறிய பிரசாந்த் கிஷோர், விரைவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறினார். அவரே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் 5 முதல் 10 வருடங்கள் உழைத்தால் தான் பெரிய கட்சியாக முடியும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து விஜய் இலக்கு 2031 தேர்தல் தானா என்று அவரது கட்சியினர் அதிர்ந்து நிற்கிறார்கள். தனியார் தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த பேட்டியில், “அதிமுக + பாஜக கூட்டணி அமைத்தால், திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்தால் […]

