News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அமித் ஷா சந்திப்பு வெற்றி… பேச்சுவார்த்தை தோல்வி…?…? இபிஎஸ் சமாளிப்பு அரசியல்

டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் யாரையும் சந்திக்க வரவில்லை என்று சொன்னார். அதன் பிறகு அமித்ஷாவை சந்தித்தார். அப்போது சந்திப்பு குறித்து கேட்டபோது இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுவதாகச் சொன்னார். இன்று, கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று சமாளித்திருக்கிறார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை என்ற பேச்சு உலவுகிறது. இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி- மக்கள் பிரச்சனைகளைப் பேசி தீர்வு காண முனையும் […]

செயின் பறிப்புக்கு என்கவுண்டர்… குற்றவாளிகளை அலறவிடும் சென்னை போலீஸ்

சென்னையில் ஒரே நாளில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வட மாநில குற்றவாளிகளை அலறவிட்டுள்ளது சென்னை போலீஸ். நேற்று முதல் செயின் பறிப்பு சம்பவம் சைதாப்பேட்டையில் காலை 6 மணியளவில் பதிவானது. அதனைத் தொடர்ந்து, சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் ஐந்து சம்பவங்கள் விரைவாக பதிவாயின. உடனடியாக செயல்பட்ட காவல்துறை, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, நகரில் […]

இபிஎஸ் முதல்வர், அண்ணாமலை துணை முதல்வரா..? பா.ஜ.க.வுக்குள் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 8 மணி நேரத்தில் 3 கார்களை மாற்றி மாற்றி பயணித்த விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அதோடு, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டாரா என்ற கேள்வி நிலவுகிறது. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் டெல்லி சென்றால் எடப்பாடி பழனிசாமிக்கு அரசு வாகனம் வழங்கப்படும். அதன்படி டெல்லி விமான நிலையத்திலிருந்து அதிமுக அலுவலகத்திற்கு வர எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்தியது அரசு வழங்கிய இன்னோவா கார். அதன் […]

சவுக்கு சங்கர் வீடு தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை பதவி பறிப்பு..? வில்லங்க அரசியல்

சவுக்கு சங்கர் வீட்டில் நுழைந்து தாக்குதலுக்கு தலைமை தாங்கிய வாணிஸ்ரீ விஜயகுமார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர். இங்கு தாக்குதல் நடந்த நேரத்தில் முதல்வரை சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கு சம்பளத்தை நிதியாக அளித்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. அதாவது, சவுக்கு சங்கர் வீட்டு தாக்குதல் குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுவது அரசியல் களேபரமாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் சவுக்கு சங்கருக்கும் நீண்ட காலமாகவே நேரடி மோதல் நடந்துவருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையைக் கைது […]

பா.ஜ.க.வில் பார்த்திபன்..? கவர்னரை பாராட்டினால் துரோகியா..?

ஆளும் கட்சியில் யார் இருந்தாலும் அவர்களுக்கு சோப்பு போடுவது போன்று அவ்வப்போது பாராட்டி வருபவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். அவரது சமீபத்திய படங்கள் எதுவுமே ஓடியதில்லை. அதனால் ராதாரவி, சரத்குமார் பாணியில் பார்த்திபனும் பா.ஜ.க.வில் சங்கமம் ஆக இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் கவர்னருடன் ஒரு விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன், ‘’இந்த நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள் என்பது மிக மிக முக்கியமானது. இங்கு தமிழ் அழகாக மணந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறார் […]

எடப்பாடி பழனிசாமியுடன் சவுக்கு சங்கர் சந்திப்பு..? தனிக் கட்சி ஆலோசனை

vசவுக்கு சங்கர் வீட்டில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது என்றாலும் இது சவுக்கு சங்கருக்கு கொடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ‘’ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் […]

ஜனநாயகன் தேர்தல் அப்டேட். விஜய்க்கு ஜாக்டோ ஜியோ கேள்வி

விஜய் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணியில் தயாராகி வரும் ஜனநாயகன் தைப் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்ட ஜனநாயகனை ஜனவரியில் வெளியிட்டால் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படும் என்று அவரது ஆலோசகர்கள் கூறியதன் அடிப்படையில் ரிலீஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டேவும், லேட்டஸ்ட் சென்சேஷன் மமிதா பைஜூவும் நடிக்கின்றனர். இந்த நிலையில் ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக திடீரென விஜய் பொங்கியெழுந்து அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கையில், ஜாக்டோ ஜியோ அமைப்பை […]

அண்ணாமலைதான் எம்.ஜி.ஆரா..? அமைச்சர்களுக்கு ஆப்பு. டாஸ்மாக், சிபிஎஸ்சி பள்ளிகளுக்குப் பூட்டு?

திருச்சி பா.ஜ.க. மாநாட்டில் எக்கச்சக்க கூட்டத்தைக் காட்டிவிட்டார்கள். இதையடுத்து, எம்.ஜி.ஆருக்குப் பிறகு அண்ணாமலைக்குத் தான் இத்தனை பெரிய கூட்டம் கூடியிருக்கிறது என்று எக்கச்சக்க பில்டப் கொடுத்தார்கள். அதேநேரம், அண்ணாமலை பேசிய நேரத்தில் கலைந்துசென்ற தொண்டர்களை புகைப்படம் எடுத்த விவகாரம் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. பா.ஜ.க. கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ’’ பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அகில உலக உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் உண்மையான தலைவராக உள்ளார். பாடல் வெளியீட்டு விழா, உதயநிதி […]

ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் சக்சஸ்…? மோடி கப்சிப்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒரு கற்பனையான பயத்தை உருவாக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தியிருக்கிறார். அதேநேரம், இந்த கூட்டம் பற்றி டெல்லி பா.ஜ.க. அமைதி காக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு நடக்கவே நடக்காது, அப்படியே நடந்தாலும் மக்களவையில் தமிழ்நாட்டிற்கு தற்போதுள்ள 7.18% பங்கு குறையாது என்று பிரதமர் மோடி அறிவித்தல் என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு அபாயம் குறித்து தென் மாநிலங்கள் போதிய […]

சீமான் போராட்டம் வீணாகிப் போச்சு..? பா.ஜ.க.வின் ஏ டீம் காரணமா..?

சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பஞ்சமர் நிலம் மீட்பு பேரணி, மாநாடு குறித்து எந்த ஊடகமும் ஒளிபரப்பு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது குறித்து நாம் தமிழர் சீமான் வேதனைப்பட்டுள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ‘’நாங்க பஞ்சமர் நில மீட்பு, சாதிவாரிக் கணக்கெடுப்பு போன்ற மிக முக்கியமான மக்கள் பிரச்சனைய முன்னெடுக்கும் போதெல்லாம் இந்த ஊடகம் காட்டுறதே இல்ல.. இது எப்படி அறமாக இருக்கும். எங்கள் சக்தி எல்லாம் வீணாகிறது. என்ன செய்தி […]