News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்! எம்.பி.தொல்திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாராளுமன்றத்தில் கடந்த (டிசம்பர்) 13ம் தேதியன்று பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. மக்களவையில் பார்வையாளர்ள் இருக்கையில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென்று அவை நடந்து கொண்டிருந்த போது உள்ளே குதித்தனர். அவர்களின் கைகளில் வண்ணப்புகையை பீச்சியடிக்கும் கருவிகள் இருப்பதை […]

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கடந்த (டிசம்பர்) 13ம் தேதியன்று மக்களவையில் பார்வையாளர்கள்  அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென்று அவை நடந்து கொண்டிருந்த போது உள்ளே குதித்தனர்.  அந்த  இருவரின் கைகளிலும் வண்ணப்புகையை பீச்சியடிக்கும் கருவிகள் இருந்ததாக அவை உறுப்பினர்கள் வெளியில் வந்து பேட்டி அளித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட அதே நாளான டிசம்பர் 13ம் தேதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 […]

கதறியழுத சாக்‌ஷி மாலிக் கண்ணீருக்கு இந்தியாவில் யாருமே பதறவில்லையா..?

இவர்தான் இந்தியாவின் அடையாளம், இவர்தான் ஒரு போராட்டதை எப்படி வெற்றிகரமாக மாற்ற வேண்டும் என்பதற்கு மாடல் பெண்மணி என்றெல்லாம் சாக்‌ஷி மாலிக் களத்தில் நின்று இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுக் கொடுத்தபோது அத்தனை பேரும் பாராட்டினார்கள். இன்று அவர் கதறியழுது கண்ணீர் சிந்தினாலும் கண்டுகொள்ள யாருமே இல்லை என்பது, இந்தியர்  ஒவ்வொருவருக்கும் தலைக்குனிவு. அவர் பிரிஜ் பூஷன் குறித்த செக்ஸ் குற்றச்சாட்டை விசாரணை செய்ய வேண்டும் என்று போராட்டக் களத்தில் நின்றார். 40 நாட்கள் களத்தில் நின்று போராடினார். […]

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஏற்பாடுகள்: தலைமை செயலாளர் நேரில் ஆய்வு!

வருகிற 2024ம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று பார்வையிட்டார்.   உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.   உலக முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, வருகிற 2023ம் ஆண்டுக்குள் […]

சிறந்த ஜூரி வெற்றிமாறன்: சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட வடிவேலு!

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று (டிச.21) நடைபெற்றது. இதில் சிறந்த நடிகராக நடிகர் வடிவேலுவும், சிறந்த ஜூரியாக இயக்குனர் வெற்றிமாறனும் அறிவிக்கப்பட்டனர். 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 57 நாடுகளைச் சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ் பிரிவில் வசந்த் பாலனின் அநீதி திரைப்படம், மந்திரமூர்த்தியின் அயோத்தி திரைப்படம், தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் […]

மாணவனுடன் ரகசிய தனிக்குடித்தனம்… செக்ஸ் வழக்கில் ஆங்கில ஆசிரியை

டீன் ஏஜ் பருவத்தில் ஆசிரியர் மீது பெண் பிள்ளைகளுக்கும் ஆசிரியை மீது பையன்களுக்கும் ஈர்ப்பு வருவது இயல்பான விஷயமே. எல்லோருமே இந்த கட்டத்தை கடந்தே வந்திருப்பார்கள். ஒருசில பிள்ளைகள் இதில் எல்லை மீறும்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியரும் ஆசிரியையும் அவர்கள் தலையில் கொட்டு வைத்து ஹார்மோன் லீலைகளை புரிய வைப்பார்கள். ஆனால், காதலை சொன்ன மாணவனுடன் ஆசிரியை ஓடிப்போனதும், ரகசியமாக தனிக்குடித்தனம் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டு, இப்போது போக்ஸோ வழக்கில் ஆசிரியை சிறைக்குப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை, சோழிங்கநல்லூரில் […]

எண்ணூர் எண்ணெய் கசிவு: சவுமியா அன்புமணி பார்வையிட்டார்!

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் பகுதிகளை பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பார்வையிட்டு பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.   மிக்ஜாம் பெருமழையின் போது மழைநீருடன் சேர்த்து எண்ணெய்யும் கசிந்து எண்ணூர் பகுதியில் பெருக்கெடுத்து ஓடி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 வாரங்களுக்கு மேலாகியும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் எண்ணூர், எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனி, பங்கிங்காம் கால்வாய் ஒட்டியுள்ள பகுதிகள், கிரிஜா நகர்,  தாழங்குப்பம், […]

மீண்டும் மிரட்டப் போகும் கனமழை: தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சி!

தென் மாவட்டங்களில் ஏற்கனவே வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்துள்ள நிலையில், மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சூழ்ந்த பெருவெள்ளம் தற்போதும் கூட வற்றாமல் இருந்து வருகிறது. பொது மக்கள் அனைத்து உடமைகளையும் […]

வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! நிவாரண பொருட்களை வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினார். குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியினர் ஹெலிகாப்டர் […]

ரஜினிகாந்த் ரசிகர்கள்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்!

நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது ரசிகர்கள் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.   குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியினர் ஹெலிகாப்டர் வாயிலாக […]