News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அண்ணாமலையின் கச்சத்தீவு ராஜதந்திரம் வீணாகிப் போச்சே… சீனாவின் அடாவடியால் அலறும் பா.ஜ.க.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக திடீரென கச்சத்தீவு விவகாரத்தை அண்ணாமலை பேசத் தொடங்கினார். அண்ணாமலையை அடுத்து வரிசையாக பா.ம.க.வின் ராமதாஸ், தினகரன் என்று ஆளாளுக்கு அதுகுறித்து பேசத் தொடங்கினார்கள். இவையெல்லாம் போதாது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் அவர் பங்குக்கு அடிமட்டத்துக்கு இறங்கிவந்து கச்சத்தீவு குறித்து ஒரு பேட்டி கொடுத்தார். இது மீனவர்களிடம் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகும் என்று அண்ணாமலை நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் சீனாவின் அடாவடி செயல் ஒட்டுமொத்த பா.ஜ.க.வின் வீரத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இந்தியாவின் அங்கமான […]

விஜயகாந்த் ஆன்மாவுக்கு ஓட்டு போடுங்க… பிரேமலதா, விஜயபிரபாகரன் புது கண்ணீர் காமெடி

ரிஷிவந்தியம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா திடீரென கண்ணீர் சிந்தி உருக்கமாகப் பேசினார். இது விஜயகாந்த் தொகுதி என்பதால் என்னால் பேசவே முடியவில்லை, கண்ணீர் கொட்டுகிறது என்று அழுது, ‘விஜயகாந்துக்காக வாக்குப் போடுங்கள்’ என்று உருக்கமாகப் பிரசாரம் மேற்கொண்டார். அதே பாணியில் விஜயபிரபாகரனும் விஜயகாந்த் ஆன்மாவை வைத்து ஓட்டு கேட்டு வருகிறார். விஜயபிரபாகரன் நிற்பதால் விருதுநகர் தொகுதி திடீரென ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி. மாணிக்கம் தாகூர் நிற்க அவருக்கு எதிராக அ.தி.மு.க. […]

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15-ம் தேதிவரை நீதிமன்ற காவல்

யூனியன் பிரதேசமான டெல்லியின் முதல்வராக பதவி வகித்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் (மார்ச்) 21ம் தேதி அவரை கைது செய்தது. இதைத்தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28ம் தேதிவரை அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் பின்னர் அந்த காவல் தற்போது ஏப்ரல் 1ம் தேதி […]

தி.மு.க.வை மிரட்டும் கச்சத்தீவு..? அண்ணாமலைக்காக களம் இறங்கும் ஜெய்சங்கர்

தேர்தல் பிரசாரத்தின் போது திடீரென 1974ம் ஆண்டு நடைபெற்ற கச்சத்தீவு விவகாரத்தைப் பற்றி பேசிய அண்ணாமலை, ‘கருணாநிதி தமிழர்களுக்கு தெரிந்தே துரோகம் இழைத்தார்’ என்று பேசினார். இதையடுத்து இரண்டு ஆதாரங்களை வெளியிட்டார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜெயசங்கர் இன்று கச்சத்தீவு பற்றி பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை உள்ளது என்று கூறியிருக்கிறார். தற்போது மீனவர்கள் பிரச்னை உச்சத்தில் இருக்கும்போது, தி.மு.க. வாக்குவங்கியை உடைப்பதற்காகவே இது திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளதாக பா.ஜக.வினர் கூறுகிறார்கள். இந்த […]

அண்ணாமலை நல்ல ஜாதி என்றால் எல்.முருகன் கெட்ட ஜாதியா..? பிரதமர் மோடியின் பேச்சுக்கு தி.மு.க. கண்டனம்

தனியார் தொலைக்காட்சிக்க்ப் பேட்டியளித்த பிரதமர் மோடி, அண்ணாமலை பற்றிய கேள்விக்கு, அவர் நல்ல பணியில் இருந்து கட்சிக்கு வந்தார். அவர் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டால் தி.முக.வுக்குப் போயிருப்பார். ஆனால், அவர் பா.ஜ.க.வுக்கு வந்தார். அவர் நல்ல ஜாதியைச் சேர்ந்தவர் என்று பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஒரு பாரதப்பிரதமர் ஜாதி பற்றி பேசலாமா என்று தி.மு.க.வினர் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறார்கள்.  இதுகுறித்து தி.மு.க.வினர், ‘அதென்ன நல்ல ஜாதியில் பிறந்தவர்?? அப்போ மற்ற சாதியினர் எல்லாம் கெட்ட ஜாதியா?? […]

பைனாகுலர் சரவணன் காமெடி… ஒரே ஒரு சத்தியம் கேட்கும் மக்கள்

அரசியலில் காமெடி செய்வதில் அ.தி.மு.க.வினரை யாரும் அடித்துக்கொள்ளவே முடியாது. செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி என்று ஆளாளுக்கு அவ்வப்போது குண்டக்க மண்டக்க பேசி நிறைய கண்டெண்ட் தருவார்கள். அந்த வகையில் இப்போது மதுரை வேட்பாளர் சரவணன் சேர்ந்திருக்கிறார். ரொம்பவும் புத்திசாலி போன்று கையில் பைனாகுலர் வைத்துக்கொண்டு, ‘மதுரை எம்.பி. வெங்கடேசன் என்ன செய்தார் என்று தேடித் தேடிப் பார்க்கிறேன், எதுவுமே தெரியவில்லை’ என்று மேடையில் ஏறி பேசினார். அந்த நேரத்தில் அவர் பைனாகுலர் மூடியை […]

தாமரையிலிருந்து தாவிய தடா பெரியசாமி… கேசவ விநாயகம் திருவிளையாடல் காரணமா..?

சீட் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி பா.ஜ.க.வின் மாநில பட்டியலின பிரிவு தலைவராக பதவி வகித்து வந்த தடா பெரியசாமி, இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 1992ம் ஆண்டு அரியலூர் மருதையாற்று பாலம் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியசாமி கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இவரை நிரபராதி என தீர்ப்பளித்து விடுதலை செய்தது. இதைத் […]

கமலுக்கு பதவி ஆசை இல்லையாம்… குஜராத் கொள்ளைக் கம்பெனி என மோடிக்கு சுளீர்

டார்ச் லைட் உடைத்துப் போட்டு ஆவேசம் காட்டிய மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இந்த தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க.வுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார். –        ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பேசிய கமல்ஹாசன் மோடி மீது தீவிரமாக அட்டாக் செய்தார். அவர் பேசுகையில், ‘நான் இந்த தேர்தலில் நிற்காமல் தியாகம் பண்ணிவிட்டதாக சொல்கிறார்கள். இது தியாகம் அல்ல, வியூகம். தமிழ் நாடு காக்கும் வியூகம். இரண்டு சீட் வாங்கி நிற்பது பெரியது அல்ல, யார் […]

அண்ணாமலைக்கு டெபாசிட்டுக்கு ஆபத்து… களம் இறங்கும் செந்தில் பாலாஜி டீம்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகவே, அவருக்கு இன்னமும் ஜாமீன் கொடுக்காமல் இழுத்தடிக்கிறது பா.ஜ.க. அரசு. ஆனால், சிறையில் இருந்தாலும் கரூர் டீம் களத்தில் இறங்கி அண்ணாமலைக்கு ஆட்டம் கொடுக்கிறது. செந்தில் பாலாஜி இங்கு இல்லை என்ற தைரியத்தில் தான் அண்ணாமலை தைரியமாக கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். ஏனென்றால் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காத மாவட்டம் கோவை மாவட்டம். அந்த அளவுக்கு அ.தி.மு.க. கூட்டணி அத்தனை […]

ராதிகாவுக்கு பிரசாரம் செய்ய குஷ்பு மறுப்பு… களம் இறங்கும் கமல், கருணாஸ்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் நடிகர் கருணாஸ், நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பொதுச்செயலாளர் எடப்பாடி உள்ளிட்ட 40 […]