அமெரிக்கா பாணியில் மோடி, ராகுலுக்கு பொது விவாதம் நடக்குமா..?

அமெரிக்காவின் தேர்தல் களத்தில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இரண்டு பேரும் நேரடியாக ஒரு பொது நிகழ்வில் கலந்துகொண்டு தங்களுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை முன் வைப்பார்கள். அப்போது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு மற்றவர் பதில் அளிப்பார். இதை பார்க்கும் மக்கள் இருவரில் யார் உண்மை பேசுகிறார், தெளிவாக இருக்கிறார் என்பதை ஆய்வு செய்து வாக்களிப்பார்கள். அப்படியொரு பொதுவிவாதம் இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை, […]
பட்டாசு ஆலையில் 10 பேர் பலி. நிரந்தரத் தீர்வுக்கு இதுவே வழி.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் ஏழு அறைகள் தரைமட்டமாகி இருக்கின்றனது. மேலும் படு காயமடைந்த பலருக்கு சிகிச்சை அளிப்பதற்கு சிவகாசி மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், சுமார் 1087 பட்டாசு ஆலைகளும், 2963 பட்டாசு கடைகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இவ்வாறு இயங்கி […]
அரியலூர் டாப், வேலூர் லாஸ்ட். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை எழுத 9 லட்சத்து 10,175 பள்ளி மாணவர்கள், 16,488 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9.26 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 9.08 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். இன்று வெளியான தேர்வு முடிவின் படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. […]
அண்ணாமலை வெளியிட்டது போலி ஆவணமா..? சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நேரத்தில் திடீரென அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரம் குறித்த ஆவணத்தை வெளியிட்டு பரபரப்பை பற்ற வைத்ஹார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமித்ஷா என்று அத்தனை பேரும் தி.மு.க. மீது குற்றம் சாட்டினார்கள். தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த ஆவணம் பொய்யான ஒன்று தெரியவரவே, அண்ணாமலைக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் […]
அமீருக்கு சீமான் திடீர் ஆதரவு… கொதிக்கும் நாம் தமிழர் தம்பிகள்

அவ்வப்போது சீமானை சீண்டும் வகையில் பேட்டிகள் கொடுத்துவந்த நடிகரும் இயக்குனருமான அமீருக்கு சீமான் பகிரங்க ஆதரவு கொடுத்திருக்கும் விவகாரம் அவரது கட்சிக்குள் பூசலை உருவாக்கியுள்ளது. இலங்கையில் பிறந்த பிரபாகரனை எப்படி தலைவராக ஏற்றுக்கொள்ளலாம் என்று அமீர் கேள்வி எழுப்பியதற்கு, ‘நீ மட்டும் அரேபியாவில் பிறந்த நபியை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளலாம்’ என்று சீமான் கேட்டிருந்தார். எனவே, அவ்வப்போது உரசல்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் அமீர் நடித்திருக்கும் புதிய படத்துக்கு வெளிப்படையாக சீமான் ஆதரவு கொடுத்திருக்கிறார். சீமான அவரது […]
நீதிபதியிடம் கதறிய சவுக்கு சங்கர்

கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை நாங்கள் தாக்கவில்லை என்று காவல் துறை கூறிய நிலையில், மதுரை நீதிமன்றத்துக்கு அவர் ஆஜராக வந்த நேரத்தில் கையில் கட்டு போட்டிருந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இவரை கோவை போலீஸார் மே 5ம் தேதி கைது செய்தனர். தேனியில் சவுக்கு சங்கர் காரில் சோதனையிட்ட பழனிசெட்டிபட்டி போலீஸார் காரில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து […]
அம்பானி, அதானி டெம்போவில் கருப்புப்பணம், மோடிக்கு ராகுல் பதிலடி

மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில், மோடியின் பிரசார யுக்தியில் முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியை குறை சொல்வதாகவே மாற்றம் அடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டு ஆட்சியில் அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் கோடீஸ்வரர்களுக்கு பல லட்சம் கோடிகளை வாரிக் கொடுத்தவர். இப்போது அவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கத் தொடங்கிவிட்டதாக பேசுகிறார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெலங்கானா மாநிலத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது, “முன்னதாக 5 தொழிலதிபர்கள் குறித்து ராகுல் காந்தி பேசி வந்தார். […]
திருநங்கை நிவேதா, சின்னதுரைக்கு ஸ்டாலின் வாழ்த்து

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானதில் பல்வேறு அரசுப் பள்ளி மாணவர்கள் நல்ல சாதனை படைத்திருக்கிறார்ள். இந்த நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். இந்த மதிப்பெண் பட்டியலில் திருப்பூர் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. 97.45 தேர்ச்சி சதவீதத்துடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை படைத்துள்ளது. மேலும், […]
ராமர் கோயிலை ராகுல் இடித்துவிடுவார் என்று மோடி பிரசாரம்

நாடாளுமன்றத்துக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் நடந்துவருகிறது. இந்த நிலையில் நேற்றைய பிரசாரத்தில் பேசிய நரேந்திரமோடி, ‘இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் பாபரி மசூதியாக மாறிவிடும்’ என்று பேசி பரபரப்பை உருவாக்கியிருக்கிறார். பா.ஜ.க. கூட்டணிக்கு 400 சீட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே ராமர் கோயிலை வைத்து இந்துக்களை கவர்வது மட்டுமே நரேந்திர மோடியின் பிரசார நோக்கமாக இருக்கிறது. இப்போது உச்சபட்சமாக, ‘இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்துவிட்டு […]
ராகுலுக்கு எதிராக 181 துணைவேந்தர்கள் போர்க்கொடி

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் துணைவேந்தர்கள் நியமனத்திற்கு பின் ஆர்எஸ்எஸ் இருக்கிறது என பகிரங்கமாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் பாஜக நாடு முழுவதும் உள்ள 181 துணை வேந்தர்களை ராகுலுக்கு எதிராக கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் இணைந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு. ‘ஒளி தருபவர்கள் எரியூட்டப்படுகிறார்கள்’ என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில், “காங்கிரஸ் […]

