எடப்பாடியுடன் மேடை ஏறுவாரா டிடிவி தினகரன்..? மோடி வருகை பரபரப்பு

பிரதமர் வருகைக்கு முன்பாக தேர்தல் கூட்டணிக்கு முழு வடிவம் கொடுத்துவிடுவோம் என்று பியூஷ் கோயல் கூறியிருக்கும் நிலையில், ஒரே பேனரில் எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் வைக்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையாகியுள்ளது. வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களோடு, அமமுக […]
ரசிகர்களை தலை குனிய வைச்சிட்டீங்களே… குடிக்கச் சொல்றாரே அஜித்

என்னுடைய ரசிகர்களை நான் தப்பாக வழி நடத்த மாட்டேன் என்று வீராப்பு பேசிய நடிகர் விஜய், இப்போது கார்ப்பரேட் விளம்பரத்தில் நடித்திருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. சினிமாவில் உச்சம் தொட்டாலும் கார் ரேஸிங் மீதுதான் அஜித்துக்கு ஆர்வம் அடிகம். அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை நடத்தி வருகிறார். இதற்காக இதுவரை திரைப்படங்கள் மூலமாக தான் சம்பாதித்த பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார். வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ள அஜித்தின் கார் ரேஸிங் அணிக்கு ஏராளமான முதலீடுகள் தேவைப்படும் […]
இன்பநிதிக்குப் பதிலாக சூரியுடன் உதயநிதி… அவனியாபுரத்தில் மூர்த்தி கெட்ட வார்த்தை

கடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இன்பநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது பெரும் வைரலானது, எனவே இந்த முறை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நடிகர் சூரியுடன் மேடை ஏறியிருக்கிறார் உதயநிதி. அதோடு முதல்நாள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மேடையில் அமைச்சர் மூர்த்தியின் கெட்ட வார்த்தை வீடியோ வைரலாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தை முதல் நாளான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. பரிசு விழா மேடையில் நடந்த […]
பராசக்தியுடன் மோடி கூட்டணி. யார் இங்கே பி டீம்

ஜனநாயகன் படத்துக்கு தடை போட்டுவிட்ட சென்சார் பராசக்திக்கு அனுமதி கொடுத்தது. இந்த நிலையில், மோடி டெல்லிக்கு பராசக்தி குழுவினரை அழைத்து பாராட்டு விழாவுடன் பொங்கல் கொண்டாடியிருப்பது எக்கச்சக்க கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து அதிமுக முக்கியப் புள்ளிகள், ‘’டெல்லியில் பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் பராசக்தி பட நடிகர்கள் கலந்து கொண்டது திமுக மீது காட்டுவதையே காட்டுகிறது. அதாவது பாஜகவின் எதிரி காங்கிரஸ் மட்டுமே திமுக அல்ல என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. பராசக்தி படம் […]
விஜய்க்கு உச்சநீதிமன்றத்தின் ஸாரி பொங்கல்… ஆறுதல் தருவாரா சகாயம்

உச்சநீதிமன்றத்துக்குப் போனால் ஜனநாயகனுக்கு விமோசனம் கிடைக்கும் என்று நினைத்தார் விஜய். ஆனால், ‘ஜன நாயகன்’ பட சென்சார் விவகாரத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தைப் பொங்கலை ஸாரி பொங்கலாக்கியிருக்கிறது. தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதமான காரணத்தால் ரிவைசிங் கமிட்டிக்குப் போகாமல் உயர்நீதிமன்றத்தை நாடியது படக்குழு. வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். தணிக்கை வாரியத்திற்கு அவகாசம் வழங்காமல் தனிநீதிபதி எப்படி தீர்ப்பு வழங்கலாம் எனக் கூறி, […]
தமிழகம் வந்த ராகுல் காந்தியை புறக்கணித்த திமுக… ஜனநாயகன் எஃபக்ட்.

வழக்கமாக தமிழகத்துக்கு ராகுல்காந்தி வருகிறார் என்றால் சமூகவலைதளங்களில் திமுக ஆதரவு பலமாக இருக்கும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு ஆதரவாக ட்வீட் போட்டது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விஜய் கூடாரத்துக்கு பல்லக்கு தூக்குவது காரணமாகவே எண்ணமோ, ராகுல் வருகையை திமுகவினர் கண்டுகொள்ளவே இல்லை. நேற்று நீலகிரியின் கூடலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வருகை புரிந்த ராகுல், குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் . பின்னர் மழை பெய்ய துவங்கியது, இருப்பினும் கொட்டும் மழையிலும் ராகுல் […]
அண்ணாமலைக்கு நோபல் பரிசு பார்சல்… புற்றுநோய்க்கு மருந்து காமெடி

அரைகுறை மருத்துவத்தை விட ஆபத்தான செயல் வேறு எதுவுமில்லை என்பார்கள். இதற்கு உதாரணமாக புற்றுநோய் செல்களை ஒழித்துக் கட்டுவதற்கு மருத்துவ வழிமுறை காட்டியிருக்கிறார் அண்ணாமலை. இப்படியொரு கோமாளியை அரசியலில் இறக்கியிருக்கிறார்கள், இவர் எப்படி ஐபிஎஸ் பாஸ் செய்தார் என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் மருத்துவர்கள். புதுவையில் நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கடைபிடிக்கப்பட்டது. பாஜக இளைஞர் அணி சார்பில், இளைஞர் எழுச்சி மாநாடு, சுவாமி விவேகானந்தர் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு […]
விஜய்க்கு டெல்லி மிரட்டல்…? விமானக் கட்டணம் ரகசியம்

விஜய் டெல்லிக்கு வருகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று த.வெ.க.வினர் வைத்த கோரிக்கையை டெல்லி அரசும் சிபிஐயும் கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை. அதேபோன்று விசாரணைக்கு வந்த விஜய்யையும் ஒரு சாதாரண விசாரணைக் கைதி போன்று அலட்சியமாகவே டீல் செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரப் பயணத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜனவரி 12-ம் தேதி விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. […]
நான்காவது நாளாக எடப்பாடி நேர்காணல்… கூட்டணிக்குள் பிரேமலதா, ராமதாஸ்..?

ஜெயலலிதா பாணியில் முதன்முதலாக விருப்ப மனு வாங்கியது மட்டுமின்றி, மனு அளித்தவர்களை நேர்காணல் அழைத்து பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இன்று நான்காவது நாளாக நேர்காணல் நடத்த இருக்கிறார். விருப்ப மனு வாங்கியவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய எடப்பாடி பழனிசாமி, ‘’ அதிமுக கூட்டணியில் புதிய கட்சி விரைவில் இணைய இருக்கிறது. அதோடு மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். நமது கூட்டணி மெகா கூட்டணியாகவும் வலிமையான கூட்டணியாகவும் அமையும். எனவே நமக்கு வெற்றி நிச்சயம், […]
திருப்பரங்குன்றத்தில் மோடி… அமித் ஷா வார் ரூம் ஸ்கெட்ச்

திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து 2026 தேர்தலை பாஜக எதிர்கொள்ள இருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. இதையடுத்தே திருப்பரங்குன்றத்துக்கு பிரதமர் மோடியை வரவழைப்பதற்கு திட்டமிடப்படுகிறது. அதோடு, திருப்பரங்குன்றம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சென்னையில் தனி வீடு அமித்ஷா தங்குவதற்கான வேலைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா போலவே தமிழக ஆளுநர் […]

