Share via:
தமிழ்நாடு சட்ட அவைத்தலைவர் ஜே சி டி பிரபாகர் உத்தரவின் பெயரில்
அவை காவலர்களால் திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கி அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த ஆட்சியில் முதன்முதலாக வெளியேற்றப்படும் நிகழ்வு நடந்துள்ளது.
முதல்வர் விஜய் பேசியதற்கு பதில் கொடுப்பதற்கு எதிர்கட்சி தலைவர்
உதயநிதியை பேச அனுமதிக்க வேண்டும் என்று திமுகவினர் இன்று சபாநாயகர் முன்னே போய் ரவுடித்தனம்
செய்தார்கள். திமுகவின் கொறடா விரும்பினால் எ.வ.வேலு அல்லது நேரு பேசுவதற்கு அனுமதி
தருகிறேன் என்று சபாநாயகர் கூறினார்.
இதையடுத்து நேற்று விஜய் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க
வேண்டும் என்று சபாநாயகரை சுற்றி நின்று தர்ணா போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவைத் தலைவரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.
சபாநாயகர் எ.வ வேலு அல்லது நேரு பேசுவதற்கு அனுமதி அளித்தும்,
உள்நோக்கத்தோடு போராடிய திமுகவினர் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்கள்
வாக்களித்த காரணத்தால் தான் அவர்கள் சபைக்கு வந்துள்ளனர். அத்தகைய மக்களுக்கு உண்மை
தெரிய வேண்டும் என்று த.வெ.க விரும்புகிறது. அதை செய்தும் வருகிறது.
திமுகவின் இந்த பொறுப்பற்ற தன்மை காரணமாக அவையில் கூச்சல் குழப்பம்
நிலவுகிறது. சபாநாயகர் நேத்து அனுமதி தரவில்லை என்று குதித்தார்கள். இன்று அனுமதி வழங்கியும்
அமளியில் ஈடுபடுகிறார்கள்.
நேரலையில் மக்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள் என்பதை திமுகவினர்
புரிந்துகொள்ளவே இல்லை என்பதுதான் பரிதாபம்.