News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சீமானுக்கு விஜய் பிறந்த நாள் பரிசு… டிரெண்டிங் ஆகும் கலவித் தலைவன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாளை இன்று அவரது கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறியிருக்கிறார். ஆனால், தி.மு.க.வினரும் விஜய் ரசிகர்களும், ‘கொள்ளைத் தலைவன்’, ‘கலவித் தலைவன்’ என்று கிண்டல் செய்து வருகிறார்கள். சீமானின் பிறந்த நாளை கொண்டாடும் தம்பிகள், ‘’சீமான் என்கிற […]

விஜய் சந்திப்புக்காக காதில் பூ சுற்றுகிறார் திருமாவளவன். தி.மு.க. ஆதாரபூர்வ குற்றச்சாட்டு

டிசம்பர் 6ம் தேதி நடைபெற இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார் என்று ஆதாரபூவமாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகிறார்கள். வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் விஜய் சந்திப்பு குறித்துப் பேசு அரசியல் குழப்பம் உருவாக்குகிறார் என்கிறார்கள். இன்று திருமாவளவன் விஜய் சந்திப்பு குறித்து தெளிவாகப் பேசியிருக்கிறார். அதில், ‘’திசம்பர் 06, புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாளன்று “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்னும் நூல்வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” […]

கோடநாடு வழக்கு: அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சம்பந்தப்படுத்தி பேசிய தனபாலுக்கு தடையும், அவதூறாக பேசியதற்காக அபராதமும் விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.     மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா கோடை நாட்களில் தங்கி ஓய்வெடுக்கும் கோடநாட்டில் அவரது மறைவுக்கு பிறகு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. அதைத்தொடர்ந்து இதுகுறித்தான வழக்கும் இன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.   இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கடந்த […]

டிடிவி தினகரனுக்கு செம ஆப்பு. முக்கியப் புள்ளிகளைத் தூக்கும் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க.வுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது என்று தொடர்ந்து கூறிவந்த அத்தனை பேரின் வாயையும் அடைக்கும் வகையில், ஒற்றுமையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி மாஸ் செய்துவிட்டார். அதோடு, டிடிவி தினகரன் பக்கமிருக்கும் கொஞ்சநஞ்ச முக்கியப் புள்ளிகளையும் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் ஸ்கெட்ச் படி கடந்த சில மாதங்களில் மட்டும் அ.ம.மு.க.வின் முக்கியப் பிரமுகர்கள் பலர் எடப்பாடி பழனிசாமியிடம் ஐக்கியம் ஆகியிருகிறார்கள். அதன்படி, அமமுக மதுரை புறநகர் தெற்கு […]

கமல்ஹாசன் பிறந்த நாளில் பா.ஜ.க., சீமான் அரசியல் கலாட்டா. இஸ்லாமியர்கள் போராட்டம்

கலைஞானி கமல்ஹாசனின் 70வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு முதல்வர் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணியினர் வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில், எதிர்பாராத விதமாக பா.ஜ.க.வும் சீமானும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அதேநேரம், இஸ்லாமியர்கள் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் குதித்திருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்த நேரத்தில் கமல்ஹாசனின் அடுத்த படமான மணிரத்னத்தின் தக்லைப் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு கமல் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. அதேநேரம் எதிர்பாராத திசையில் […]

ராமதாஸ்க்கு தேர்தல் ஜூரம் வந்தாச்சு, இனிமே அடிக்கடி கலவரம், போராட்டம் தான்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லாம் ஏதாவது போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு மஞ்சள் படைக்கு உற்சாகம் கொடுப்பது டாக்டர் ராமதாஸ் பழக்கம். அந்த வகையில் இப்போது, ’’வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என கொக்கரிக்கும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா? உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!”  என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விட்டதையடுத்து கடலூர் மாவட்டம் செம ஹாட் ஆக மாறியிருக்கிறது. இது குறித்து ராமதாஸ் ஆதரவாளர்கள், ‘’கடலூர் மாவட்டம் புவனகிரியை […]

அடிமை ரவிக்குமாரே தி.மு.க.வை திட்டுகிறாரே..? திருமாவளவன் விஜய் கூட போறது உறுதிதானோ..?

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கும் தலைவர்களில் தீவிரமான ஸ்டாலின் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டவர் ரவிக்குமார் எம்.பி. ஒரு முறை தி.மு.க.வின் சின்னத்திலும் நின்று வெற்றி பெற்றவர். இதுவரை தி.முக.வுக்கு எதிராக எதுவுமே பேசியதே இல்லை. அவரே இப்போது தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்திருப்பது உடன்பிறப்புகளை அதிர வைத்துள்ளது. மேலும், திருமாவளவனும் விஜய்யும் ஒண்ணு சேரப் போவது உறுதி என்றும் தெரிவதாகச் சொல்கிறார்கள். வரும் 2026 தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் தான் இருப்போம் என்று விடுதலை சிறுத்தைகளின் […]

வேலைக்கார சிறுமி கொலையில் கைது ஆவாரா தி.மு.க. எம்.எல்.ஏ…? களம் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சி

சென்னையில் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட தலித் சிறுமி சித்ரவதை செய்து குரூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மிகப்பெரும் அரசியல் சதி இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்துப் பேசும் கம்யூனிஸ்ட் கட்சீயீனர், ‘’வேலைக்கார சிறுமியை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிறுமியின் தாயாரைக் கூட்டிவந்து ஸ்டேஷனில் மிரட்டி பொய்யாக ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார்கள். உண்மையை ஆளும் […]

விஜய்யால் சீமான் கட்சி கூடாரம் காலியாகும்! மாணிக்கம் தாகூர் எம்.பி. கருத்து!

தமிழக வெற்றிக்கழகம் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது சில  மாதங்களிலேயே மின்னல் வேகத்தில் கட்சிப்பணியாற்றி வருகிறது. இது திராவிட கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக தம்பி, தம்பி என்றும், கூட்டணி குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் பகிரங்கமாக விஜய் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது மிகப்பெரிய அளவில் அந்தர்பல்டியடித்துள்ளார்.   தமிழக வெற்றிக்கழக முதல் […]

தீபாவளி எதிரொலி: 300க்கும் மேற்பட்டோரின் கண்பார்வை பாதிப்பு!

கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இருப்பினும் தீபாவளி பண்டிகைக்கு முன்கூட்டியே பலர் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்துவிட்டனர். அதோடு தீபாவளி முடிந்தும் நவம்பர்3ம் தேதி வரை ஆர்வமாக பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.   பட்டாசு வெடிப்பதற்கான பல வழிகாட்டுதல்கள் மற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், அதை மீறி பலர் பட்டாசு வெடித்தபோது விபத்துகளில் சிக்கின அசம்பாவிதங்களும் அரங்கேறின.   அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி முதல் 3ம் தேதிவரை […]