25 சீட்டுக்கு ஆசைப்படும் திருமாவளவன். தி.மு.க. முடிவு என்ன..?

மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை திருமாவளவன் பேசி வருகிறார். அதாவது, ‘நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம். இது கொள்கைக் கூட்டணி’ என்று சொல்கிறார். அதேநேரம், கூட்டணியை உடைக்கும் வகையில் 25 சீட் கேட்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின்றன. தினம் தினம் வெவ்வேறு இயக்கங்களில் இருந்து நிர்வாகிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வந்து இணைவதாக திருமாவளவன் செய்தி வெளியிட்டு வருகிறார். அதோடு 234 தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர்கல் நியமனம் செய்து எல்லோருக்கும் பதவி கொடுத்து கட்சியை வளர்ச்சியடையச் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

தென்மேற்கு வங்கக்கடல் இன்று முதல் நவம்பர் 15-ம் தேதி வரை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக தகவல் , இதன் காரணமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது . அதை தொடர்ந்து தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று (11/11/2024) மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் கணித்தது . அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம் ,கடலூர் , மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் ,திருவாரூர் […]
எடப்பாடி பழனிசாமிக்கு களம் இறங்குகிறார் பிரசாந்த் கிஷோர்… பா.ஜ.க. கூட்டணிக்குப் பச்சைக் கொடி

வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணிகள் 200 இடங்களில் ஜெயிக்க வேண்டும் என இப்போதே முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இதனை முறியடிக்க வேண்டும் என்றால் மெகா கூட்டணி அமைத்தால் மட்டுமே சாத்தியம் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதன் அடிப்படையில் பா.ஜக. கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி பச்சைக் கொடி காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சுனில் பணியாற்றினார். மரியாதைக்குரிய இடங்களைப் பிடித்து எதிர்க் கட்சியாக மட்டுமே எடப்பாடி ப்ழனிசாமியால் மாற முடிந்தது. […]
கமல்ஹாசனுக்கு 70 வயதில் ஞானோதயம்..! இது தான் காரணமா..?

தசாவதாரம் படத்தில், ‘கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே..’ என்று தனக்காகவே ஒரு பாடல் வைத்தவர், ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று தன்னைப் பற்றி பாட வைத்த கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு, ‘இனிமேல் உலகநாயகனே’ என்பது போன்ற பட்டங்கள் வேண்டாம் என்று அறிவிப்பு செய்திருப்பது, அவரது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று கமல்ஹாசன் விடுத்திருக்கும் அறிக்கையில், ‘என் மீது கொண்ட அன்பினால், ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, […]
கத்தி எடுத்து கழுத்தை அறுத்துடுவேன்… வைரலாகும் பா.ம.க. சிறுமி வீடியோ

வன்னியர் சங்கத் தலைவரை கொலை செய்வோம் என்று பொதுவெளியில் மிரட்டல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் பல போராட்டங்களை நடத்தியது டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி. இந்த நிலையில் பா.ம.க. சிறுமியின் வன்முறைப் பேச்சு வீடியோவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வைரலாக்கி வருகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை கழுத்தில் போட்டிருக்கும் சிறுமியிடம் உங்களுடைய கட்சி எது, தலைவர் யார் என்றெல்லாம் ஒருவர் கேட்கும்போது, ‘பாட்டாளி மக்கள் கட்சி, டாக்டர் […]
மீடியாவைப் பார்த்தாலே டென்ஷனாகும் திருமாவளவன்..! தி.மு.க. மிரட்டல் காரணமா?

மீடியாக்களிடம் எப்போதும் ஃப்ரெண்ட்லியாக இருக்கும் திருமாவளவன் இப்போது கையெடுத்துக் கும்பிட்டு ஓடிப்போவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணிக் குழப்பம், விஜய் சர்ச்சையில் வாய் திறக்கக்கூடாது என்று தி.மு.க. எச்சரிக்கை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் கோபமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பொருத்தமில்லாத […]
சிட்னி விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து !

சிட்னி விமான நிலையத்தில் இருந்து பிரின்பேனுக்கு குவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் இன்று மதியம் 1 மணி அளவில் புறப்பட்டது . புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் வலது புறம் உள்ள என்ஜின் வெடித்து தீ பற்றியது. அதனால் விமானம் 3ம் ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கியது . அதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்டுக்குள் கொண்டுவந்தனர் . இந்த விமானத்தில் பயணித்த 174 பயணிகளும் பாதுகாப்பனமுறையில் மீட்கப்பட்டதாக அந்த நாட்டின் தனியார் செய்தித்தாள் […]
எடப்பாடி பழனிசாமி கண்டனம் – மக்களுக்கு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்காத திமுக .

எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறியிருப்பத்தாவது . அம்மா ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக , திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 42 மாதங்களில் , பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யததால் , அதை முழுமையாக முடிக்கப்படாமலும் போடப்பட்டுள்ளன . செயல்படுத்தாத திட்டங்கள் :- * விழுப்புரத்தில் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. * காவிரியின் குறுக்கே நஞ்சை – புகளூர் கதவணையுடன் […]
வில்லங்க வீடியோவில் சிக்கினாரா ஆதினம்..? சர்ச்சையில் சூரியனார் கோயில் மடாதிபதி

சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி ஒரு பெண் பக்தையை திருமணம் செய்துள்ள விவகாரம் படு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பாலியல் வீடியோவில் சிக்கிக்கொண்ட காரணதால் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டார் என்று ஒரு செய்தி பரபரக்கிறது. திருவிடைமருதூர்: சூரியனார் கோயில் ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக இருக்கிறார் மகாலிங்க சுவாமி. இவர் கடந்த மாதம் 10ம் தேதி ஹேமாஸ்ரீ என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்தி வைரலானது. சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது உறவினர்களும் சேர்த்து சொத்தைக் […]
கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் !

தென்மேற்கு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் வளிமண்டல சுழற்சி நிலவும் நிலையில் , தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் , புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் , இடி , மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெருவித்துருத்தது . இதன் தாக்கம் காரணமாக இன்று முதல் வரும் 14-ந்தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது […]

