News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கடந்த ஐந்து ஆண்டுகளாக காவிரியில் சரியான நேரத்துக்கு வந்துகொண்டிருந்த தண்ணீர் இந்த ஆண்டு அம்பேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசி தீவிரம் காட்டிவருகிறது. இதுவரை அதற்கு ஒரு வார்த்தைகூட விஜய் பேசவில்லை என்பதுதான் பெரும் ஆச்சர்யம்.

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் கடந்த 2018 பிப்ரவரி 16_ம் நாள் அன்று தனது இறுதி தீர்ப்பில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு காவிரியின் குறுக்கே எந்த அரசும் அணை, நீர்த்தேக்கம் கட்டக்கூடாது என்று தெளிவாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே கட்டுமானம் மேற்கொள்ள பிற மாநிலங்களின் ஒப்புதல் தேவை என உச்சநீதிமன்றம் கூறவில்லை என்று இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் ராஜ்பூஷன் தெரிவித்தபிறகும் விஜய் வாயைத் திறக்கவே இல்லை.

இதுகுறித்துப் பேசும் விவசாயிகள், ‘’தமிழ்நாட்டின் குறுவை விவசாயம் ஏற்கனவே காய்ந்துவிட்டது, வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது உடனடியாகத் தண்ணீர் வந்தாக வேண்டும். காவிரி நீர் ஒழுங்காற்று குழு 29.07.2026 முதல் 15 நாட்களுக்குப் பிலிகுண்டுலுவில் தினமும் 3,500 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதை உடனடியாக நிறைவேற்றாமல் மேல்முறையீடு என்று கர்நாடகா இன்னமும் தாந்தோன்றித்தனமாக செயல்படுகிறது.

இந்த நிலையில் விஜய் கர்நாடகாவுக்குச் செல்வது தேவையற்ற பின்விளைவுகளையே உருவாக்கும். போகவேண்டாம்’’ என்று குமுறுகிறார்கள்.

ஆனால், விஜய் ஒரு முறை சொல்லிவிட்டால், அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாரே. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link