Share via:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து
மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் 151 மருத்துவ இடங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
விஜய் என்ன செய்கிறார் என்ற கேள்வி எழுகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘திருநெல்வேலியில்
உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை
28, 2026) நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’
முதன்மையாகப் பாடப்படாமல், மூன்றாவதாகப் பாடப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கும் தமிழ்
மொழிக்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அவமதிப்பாகும்.
குறிப்பாக, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான ‘நீராரும் கடலுடுத்த’
என்ற பாடலை எழுதிய பேராசிரியர் மனோன்மணியம் பெ. சுந்தரனார் அவர்களின் பெயர் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே,
இப்பாடல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆளுநர்
மாளிகையின் உத்தரவுப்படி வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும்,
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்படும் என்ற துணைவேந்தரின் அறிவிப்பு மாநிலத்தின்
சுயேச்சை உரிமையை மீறும் செயல்’’ என்று கண்டனம் செய்துள்ளார்.
அதேபோல் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், ‘’தமிழ்நாட்டின் 151
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் அகில
இந்திய ஒதுக்கீட்டிற்கு சென்றுவிட்டன. இந்த இடங்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசு உண்மையிலேயே
போராடியதா? மக்கள் அறிய வேண்டிய 4 கேள்விகள்:
1) என்.கார்த்திகேயன்
தீர்ப்பை பெரிய அமர்வுக்கு மாற்றக் கோரியதா? 2)இடங்களை பாதுகாக்க இடைக்காலத் தடையாணை
கோரியதா? 3)கலந்தாய்வுக்கு முன் அவசர விசாரணை கேட்டதா?
2) 4)அரசு மருத்துவமனைகளின் தேவையையும், அவசியத்தையும்
நிரூபிக்கும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததா?
இந்த நான்கு கேள்விகளுக்கும் தெளிவான பதில் இல்லையெனில், தமிழ்நாட்டின்
உரிமையை பாதுகாக்க அரசு தேவையான சட்டப் போராட்டத்தை முழுமையாக மேற்கொண்டதா என்ற கேள்வி
தவிர்க்க முடியாததாகிறது.’’ என்று குரல் கொடுத்துள்ளார்.
என்ன செய்யப்போகிறார் விஜய்?
