News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ‘‘சிபிஐ விசாரணை இன்னும் முடியாத நிலையில், விஜய் அங்கு செல்வது விசாரணையை பாதிக்கும் என்றும் எனவே விஜய் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும்’’ என்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

 

 

முதலமைச்சர் விஜய்யை கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் அக்யூஸ்ட் என கூறிய திமுக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமாருக்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ‘’எப்படிந் நீங்கள் அப்படி சொல்லலாம். திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூட விஜய் பெயர் இல்லையே. உங்கள் அரசியல் சண்டையை கோர்ட்டுக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள்’’ என்று தள்ளுபடி செய்துவிட்டது.

கரூர் வழக்கில் விஜய்யை வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்து, கைதுசெய்து சிறைக்குத் தள்ளாத கையாலாத்தனத்துக்குதான் இப்போது உச்ச நீதிமன்றத்தில் செருப்படி வாங்கிக் கொண்டிருக்கிறது வெட்கங்கெட்ட திமுக. என்று அந்த கட்சியினரே கடுப்பாகிறார்கள்.

திமுக தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் கரூர் பயணத்திற்கு இருந்த அனைத்து தடைகளும் நீங்கியுள்ளன. சட்டரீதியில் தமிழக வெற்றிக் கழகத்திடம் முதல் தோல்வியை பெற்றுள்ளது திமுக. மனுவை முறையாக தயாரிக்காமல் சரியான தகவல்களை மூத்த வழக்கறிஞர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது.

அதேநேரம் திமுகவினர், ‘’முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் விவகாரம் குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டுமென்பதுதான் வழக்கு. ஆனால், இதை உச்ச நீதிமன்றம் வேறு மாதிரி பார்க்கிறது.  செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் சாட்சியை கலைத்து விடுவார்? அதனால் ஜாமின் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா என்று கேட்ட உச்சநீதிமன்றம். இன்று பாதிக்கப்பட்ட நபருக்கு உதவிகள் வழங்குவது எப்படி சாட்சிகளை கலைப்பதாகும் என்றும் கேட்கிறது? நீதிமன்றத்தில் செயல்பாடுகள் மர்மமான இருக்கிறது’’ என்று புலம்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link