News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

காரைக்குடி அரசுப் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர் பிரபு முன்னிலையில் மாணவர்கள் டிவிகே, டிவிகே என அரசியல் கோஷங்களை எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்விக்கூடங்களில் எந்த கட்சி நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது, தேவையில்லாமல் மாணவர்களிடம் அரசியல் பேசக்கூடாது என்று சமீபத்தில் விஜய் அரசு சர்குலர் வெளியிட்டது. ஆனால், அதுவெல்லாம் மற்ற கட்சிகளுக்கு மட்டுமே எனும் அளவுக்கு சர்ச்சையைத் தூண்டியிருக்கிறது ஒரு வீடியோ.

காரைக்குடி அரசுப் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர் பிரபுவின் நிகழ்ச்சிகளை ரீல்ஸ் எடுப்பதற்காக மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர். அமைச்சரை வரவேற்பதற்கு, டிவிகே, டிவிகே என்று கூச்சல் போட்டுள்ளனர். அமைச்சர் இதனை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசிக்கிறார். இந்த வீடியோ இப்போது படு வைரலாகியுள்ளது.  

கல்விக்கூடங்களில் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடை உள்ள நிலையில், இந்த சம்பவத்திற்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன

அரசுப்பள்ளிகளில் இதுபோன்று இனி நடக்காது என உறுதியளித்த ராஜ்மோகன் இப்போது என்ன பதில் வைத்துள்ளார்? தனியார் பள்ளிகளிலும் இது தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் தவெகவினர், ‘’இதில் என்ன தப்பு. மாணவர்களுக்கு அரசியல் தெரியவேண்டும். இதை பார்த்தால் பெற்றோர் மகிழ்ச்சி அடைவார்களே தவிர, விமர்சனம் செய்ய மாட்டார்கள்’’ என்கிறார்கள்.

விஜய்க்காக ஓட்டு போட்டவர்கள், இதற்கும் சந்தோஷப்பட வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link