News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

மாணவர்களே, இளைஞர்களே குடிக்கு ஆளாக வேண்டும், ஒரு அப்பாவாக நான் சொல்வதைக் கேளுங்கள் என்று போட்டோ சூட் நடத்தி வீடியோ வெளிவிட்ட ஸ்டாலின், இப்போது குடிப்பதற்கு இலக்கு நிர்ணயித்து அதை தாண்டி சாதனை படைத்திருக்கிறார்.

எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கருப்புச் சட்டை அணிந்துகொண்டு தனது இல்லத்தின் வாயிலில் பதாகையை ஏந்தியவாறு போராடியவர் திமுக தலைவர் ஸ்டாலின்.  இப்போது முதல்வராக இருக்கிறார். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மது விற்பனைக்கு ஒவ்வொரு முறையும் இலக்கு நிர்ணயித்து விற்பனையை அதிகப்படுத்தும் வேலை நடந்துவருகிறது. அதன்படியே இப்போது தீபாவளி பண்டிகைக்கும் தனி இலக்கு நிர்ணயித்து, அந்த இலக்கையும் தாண்டி விற்பனை அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் நிறுவனம் மெய்சிலிர்க்க செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் தனியார் வசம் இருக்கின்றன. ஒட்டுமொத்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு 120 கோடி ரூபாய் முதல் 130 கோடி ரூபாய் வரை ‘அஃபிஷியல்’ மது விற்பனை நடைபெறுகிறது.

டாஸ்மாக் வார இறுதி நாட்களில் விற்பனையானது 140 கோடி ரூபாய் முதல் 150 கோடி ரூபாயாக அதிகரிக்கிறது. அதிலும் பண்டிகைக் காலங்களில் மது விற்பனைப் பற்றி சொல்லவே தேவையில்லை, வழக்கத்தை விட கூடுதலாகத்தான் வருவாய் ஈட்டப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை 438 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே, இந்த ஆண்டு 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனத்தினால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் தாண்டி 789 கோடியே 85 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

கடந்த 18ம் தேதி மட்டும் 230 கோடியே 6 லட்ச ரூபாய்க்கும், 19ம் தேதி மட்டும் 293 கோடியே 73 லட்ச ரூபாய்க்கும், தீபாவளி தினமான 20ம் தேதி மட்டுமே 266 கோடியே 6 லட்ச ரூபாய்க்கும் என மொத்தம் 789 கோடியே 85 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருக்கிறது என்பதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விற்பனையை மண்டலம் வாரியாகப் பார்க்கும்போது, அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 158 கோடியே 25 லட்ச ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 157 கோடியே 31 லட்ச ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 153 கோடியே 34 லட்ச ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 170 கோடியே 64 லட்ச ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 150 கோடியே 31 லட்ச ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இதற்கு ரஜினி, கமலைக் கூப்பிட்டு வைத்து ஒரு பாராட்டு விழா நடத்துங்கப்பா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link