News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கடந்த ஆட்சியில் செந்தில்பாலாஜி மீது பாஜக தொடர் நடவடிக்கை மேற்கொண்டு
சிறையில் தள்ளியது. அதேபோன்று இப்போது தவெக அரசு தொடர்ந்து செந்தில்பாலாஜி மீது அதிரடி
நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

டாஸ்மாக் தொடங்கி அவர் வகித்த மின்சாரத்துறை வரையிலும் பல்வேறு
விவகாரங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச
ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுவருகிறது. சென்னை பெருங்குடியில் 4 இடங்கள், அண்ணா நகரில்
3 இடங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு என லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்துவருகின்றனர்.

நேற்றைய தினம் சென்னை ஆழ்வார்பேட்டையில் வருமான வரித்துறை கம்ப்யூட்டர்
உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. கம்ப்யூட்டர்
உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் இந்த நிறுவனத்திற்கும் மின்சார ட்ரான்ஸ்பார்ம் கொள்முதலில்
முறைகேடு இருப்பது தொடர்பாக சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனத்திற்குத் தொடர்புடைய எர்ணாவூர்,
ஆழ்வார்பேட்டை, விருகம்பாக்கம், ராஜமங்கலம் உள்ளிட்ட சில இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச
ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுவருகிறது. இரண்டு ரெய்டுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும்
நிலையில், செந்தில்பாலாஜி மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

திமுக தலைமையால் தன்னை காப்பாற்ற முடியாது என்பது செந்தில்பாலாஜிக்குத்
தெரிந்துவிட்டதால், பாஜகவில் சேரும் முடிவுக்கு வந்திருப்பதாகவும், விரைவில் அதற்கான
அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link