Share via:
டாஸ்மாக் முறைகேடு புகாரின் அடிப்படையில் நேற்று சென்னை, கோவை,
ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி என 41 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர்
ரெய்டு மேற்கொண்டுள்ளனர். மதுபானங்களை கொள்முதல் செய்யும்போது, சரியான பில் கொடுக்காமல்
கொள்முதல் செய்ததால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் தற்போது 41 இடங்களில் ரெய்டு மெற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து செந்தில்பாலாஜி, ‘’லஞ்ச ஒழிப்பு துறை போலிசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்
எவ்வித ஆவணமும் கைப்பற்றவில்லை என லஞ்ச ஒழிப்பு துறை என்னிடம் கையெழுத்து வாங்கி சென்றுள்ளனர்’’
என்று பேட்டியளித்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு
போலீசார் வழக்கு பதிவு சட்டவிரோதமாக டாஸ்மாக்கில் முறைகேடுகள் செய்ததாக முன்னாள் டாஸ்மாக்
நிர்வாக இயக்குனர் விசாகன் உட்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு
செய்துள்ளனர்.
டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம்
, செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகாரிகளுடன் சேர்ந்து
ரூபாய் 17.27 கோடி முறைகேடுகள் செய்ததாகவும் 2020 முதல் 2025 ஆம் ஆண்டு வரை குற்றம்
நடந்தாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்களைக் குறிப்பிட்ட ஒரு சில சிண்டிகேட்களுக்கு
மட்டும் சாதகமாக முடிப்பது, உரிமம் புதுப்பிக்கப்படாத பார்களை சட்டவிரோதமாகச் செயல்பட
விட்டு அரசுக்குக் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்துவது மற்றும் சில்லறை விற்பனைக்
கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கூடுதலாக வசூலித்து
ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கையாடல் செய்தது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் இதில்
அடங்கியுள்ளன.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி (A-1), டாஸ்மாக்
முன்னாள் எம்பி விசாக்கன் (A-2), முன்னாள் மண்டல மேலாளர்கள் இராம துரை முருகன்
(A-3), பன்னீர் செல்வம் (A-4), அமைச்சரின் முன்னாள் நேர்முக உதவியாளர் பாஸ்கர்
(A-5) மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளிகளான ரதேஷ் ராஜ் சண்முகவேல் (A-6), கார்த்திக்
(A-7) ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120B (சதித்திட்டம்),
167, 409 (நம்பிக்கை மோசடி) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of
Corruption Act, 1988 as amended in 2018) பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2024 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த பாரதிய நியாய சன்ஹிதா
(BNS) சட்டப்பிரிவுகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களில்
செல்வாக்கு செலுத்தியது முதல் மதுபான விநியோகத்தில் ஒருசில குறிப்பிட்ட ஆலைகளுக்கு
மட்டும் முன்னுரிமை அளித்தது வரை அனைத்து நிலைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக எஃப்.ஐ.ஆரில்
விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது…’’
இதெல்லாம் அடுத்தகட்ட விசாரணைக்குப் போகுமா… செந்தில்பாலாஜிக்கு
சம்மன் அனுப்பி கைது செய்வார்களா அல்லது கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்குமா..?
