Share via:
இத்தனை காலமும் திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு ஜால்ரா கூட்டணியாக இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளுக்கு திடீர் யோகம் விஜய் மூலம் கிடைத்தது.
தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்கமுடியாத மாற்றமாக கூட்டணி அமைச்சரவை பதவியேற்றது. திமுகவுடன் கூட்டணி போட்டு வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் கிடைத்தன.
உடனே இந்த கட்சிகள் சட்டென தங்கள் நிறத்தை மாற்றிக்கொண்டு விஜய் ஆதரவாளராக மாறி, அவருக்கு பல்லக்குத் தூக்குகின்றன. அதேநேரம், பழைய எஜமானர் பாசத்தையும் அவர்களால் விட முடியவில்லை. அதனால், அவ்வப்போது விஜய் மீது விமர்சனம் வைத்து, தங்களுடைய கெத்தைக் காட்டிவருகிறார்கள்.
அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கும் திருமாவளவன், ‘கரூர் சம்பவத்துக்கு விஜய் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஸ்டாலினிடம் சொன்னேன்’ என்பதும், ‘எஸ்.ஐ.ஆர். காரணமாகவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது’ என்று பேசவும் செய்கிறார். அதேநேரம், விஜய்க்கு ஜால்ரா போட்டு காரியங்களை சாதிக்கவும் செய்கிறார்.
கம்யூனிஸ்ட் இன்னமும் ஒரு படி மேலே போய்விட்டனர். ஆளும் விஜய் கட்சிக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டே, இடைத்தேர்தலில் எதிர்த்துப் போட்டியும் போடுகிறார்கள்.
திமுகவுடன் உறவு வேண்டாம் என்று வந்துவிட்ட காங்கிரஸ் கட்சி, இப்போதும் இண்டியா கூட்டணிக்கு வரவேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்துக்கொண்டே இருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது, ஏகப்பட்ட விலங்குகளை வைத்துக்கொண்டு விஜய் சர்க்கஸ் நடத்துவது போல் தெரிகிறது. இந்த ஆட்சி நன்றாக நடக்கவேண்டும் என்றால், விஜய் சவுக்கை எடுத்து அடிக்கத் தொடங்கவேண்டும். இல்லையென்றால், இந்த மிருகங்கள் ஆட்சியை ஆட்டம் காண வைத்துவிடும். ஜாக்கிரதை.
