Share via:
பி.டி.அரசகுமார், ஜெம் வீரமணி என்று திமுக ஆட்சியில் நடந்த கொடூரங்களும் மாஜி அமைச்சர்களின் ஊழல்களும் விஜய் ஆட்சியில் தோண்டியெடுக்கப்படுகின்றன. வெளியாகும் ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சி தருகின்றன.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் எப்படியாவது தவெகவை தோற்கடிக்க வேண்டும் என்று திமுகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி போட்டு தேர்தலில் நிற்கிறார்கள். ஒரு தொகுதியில் அதிமுக ஜெயிக்கட்டும் என்று சென்னை வேட்பாளர் பரந்தாமனை இறக்கியிருக்கிறது திமுக.
ஆனால், பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் விஜய் இரண்டு கட்சிகளும் ஒன்றுக்குள் ஒன்று கூட்டணி. திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்திவருகிறார். இது, ஏற்கெனவே திமுகவின் கூட்டணிக் கட்சிகளை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. அதனாலே விஜய் ஆட்சிக்கு தோள் கொடுத்த கம்யூனிஸ்ட் இப்போது எதிர்த்துப் போட்டியிடுகின்றன.
இத்தனை நாட்களும் திமுகவை குற்றம் சாட்டிவந்த திருமாவளவன், காங்கிரஸ் கட்சியினர் இப்போது அமைதியாகி உள்ளனர். இடைத்தேர்தலில் ஒரு வேளை திமுக ஜெயித்துவிட்டால், திசை மாறலாம் என்று தவிக்கிறார்கள்.
எது, எப்படியோ திமுகவை விஜய் விடுவதாக இல்லை. புரட்டியெடுத்து வெளுக்கிறார்.