News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

முதலமைச்சர் விஜய் அவர்களோடு அமைச்சர்களாக பதவியேற்ற 9 பேருக்கும் பல துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் பதவிற்கும் வரை ஒருவருக்கு பல இலாக்கா தொடரும். புதியவர்களுக்கு வாய்ப்பு தரப்படும் சமயத்தில் இவர்களிடம் இருக்கும் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்படும்.

தமிழ்நாடு அமைச்சரவையில் மொத்த உறுப்பினர்களில் 15 சதவீதம் பேர் அமைச்சர்களாக இடம் பெற முடியும். அதாவது 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 15% என்பது கிட்டத்தட்ட 35 பேர் அமைச்சராக முடியும்.

காங்கிரஸ் விஜய் அமைச்சரவையில் பங்கேற்பது உறுதியாகத் தெரிகிறது. அவர்களுக்கு இரண்டு அமைச்சர் பதவி. விசிகவுக்கு ஒன்று தருவதற்கு விஜய் தயாராக இருக்கிறார்.

அதேபோல் அதிமுக வேலுமணி டீமில் 6 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எடப்பாடி நீதிமன்றத்துக்குப் போய்விட்டால், அமைச்சரவை பதவி பஞ்சாயத்தாகிவிடும். அதோடு, வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் போன்றவர்கள் மீது இருக்கும் ஊழல் வழக்கும் விஜய்யை யோசிக்க வைத்திருக்கிறது.

யார் அமைச்சர் ஆனாலும் ஆகவில்லை என்றாலும் லீமா ரோஸ் அமைச்சராக வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். அவரது பதவி இன்னமும் பறிக்கப்படவில்லை. அப்படி பறித்தாலும் தவெக சார்பில் நின்று வெற்றி பெறத் தயாராக இருக்கிறாராம்.

இந்த விஷயத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இன்னும் கொஞ்சம் ஆறப்போட நினைக்கிறாராம் விஜய். அவசரப்பட்டு மாட்டிக்கொள்ள விரும்பவில்லை விஜய்.

அதேநேரம்  தமிழக வெற்றிக் கழக தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தபடி சில துறைகள் புதியதாக உருவாக்கப்பட வாய்ப்பு உண்டு. பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஏஐ சார்ந்த புதிய துறைகள் உருவாக்கப்படும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link