Share via:
சட்டமன்றத் தோல்விக்குப் பிறகு
திமுக காரணங்களை ஆய்வு செய்துவருகிறது. ஆனால், அதிமுகவில் தன்னுடைய கட்சிப் பதவியைக்
காப்பாற்ற எடப்பாடி போராடி வருகிறார்.
எளிதாக 32 பேர் ஆதரவு கிடைத்துவிடும்
என்று அதிமுகவில் இருந்து வெளியேறிய வேலுமணி டீமுக்கு 25 பேர் மட்டுமே ஆதரவு கொடுத்தது
சிக்கலாகிவிட்டது. ஆனாலும், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின்
தவெக ஆதரவு அதிமுகவினரால் ஏற்க முடியவில்லை. அதனால் சசிகலாவை சந்தித்துப் பேச முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு கே.சி.பழனிசாமி இரண்டு முக்கியமான
கேள்விகள் எழுப்பியிருக்கிறார்.
முதல் கேள்வி, திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க நீங்கள் முயற்சித்தது
உண்மையா இல்லையா? உங்கள் மகன் மற்றும் சிலர் உதயநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது
உண்மையா இல்லையா?
இரண்டாவது கேள்வி இது. லீமா ரோஸை ஒரு மாதத்திற்கு முன் கட்சியில்
சேர்த்து, அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததால், இன்றைக்கு அதிமுகவில்
ஏற்படும் பிளவுகளுக்கு அவர் மூலகாரணமாக இருக்கிறார். ஆனால் எல்லோருடைய கட்சி பொறுப்புகளையும்
பறித்த நீங்கள், அவரின் கட்சி பொறுப்புகளை பறிக்கவோ அல்லது அவரை கட்சியில் இருந்து
விலக்கவோ ஏன் தயங்குகிறீர்கள்?
அவரிடம் இருந்து நீங்கள் பணம் பெற்றுக்கொண்டுதான் சீட்டு வழங்கியதாக
பொதுவெளியில் பேசப்படுகிறது. இந்த இரு விஷயங்களிலும் உண்மைத்தன்மை என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள்.
நீங்கள் மிகப்பெரிய முருக பக்தர் என்று பல நேரங்களில் தெரிவித்திருக்கிறீர்கள்.
சி.வி.சண்முகம் பேசும்போது சத்தியம் செய்து சொல்கிறார், நீங்கள் அப்படி சத்தியம் செய்து
இந்த இரண்டு விசயங்களின் உண்மை தன்மை குறித்து சொல்ல தயாரா? என்று கேட்டுள்ளார்.
இந்த சூழலை பயன்படுத்தி எப்படியாவது கட்சிக்குள் நுழைந்துவிட வேண்டும்
என்றுதான் கே.சி.பழனிசாமி துடித்துக்கொண்டிருக்கிறார். அவர் கேள்விகளுக்கு எல்லாம்
பதில் சொல்ல முடியாது என்கிறது எடப்பாடி தரப்பு. சசிகலா வந்தாலும் எதுவும் நடக்காது
என்கிறார்கள்.
பார்க்கலாம்.
