Share via:
இன்று சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பால் கொள்முதல் விலை உயர்வு
மருத்துவ காப்பீடு வரம்பு அதிகரிப்பு திருநங்கைகளுக்கான சிகிச்சை சிறப்பு அறிவிப்பு
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் மற்றும் உதவியாளர் வசதி அறிவிப்பு ராஜாஜி
அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல்
மாணவர் இடங்கள் உருவாக்கம் என ஒரே நாளில் அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு
அனைவரது கவனத்தையும் பாராட்டையும் ஈர்த்திருக்கிறார் முதல்வர் விஜய்
முதலமைச்சர் ஜோசப் விஜய், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹38-லிருந்து
₹41 ஆக உயர்த்தப்படும்
என்று அறிவித்தார். பால் உற்பத்தியாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த
அங்கீகாரம் என்று பால் உற்பத்தியாளர்கள் வரவேற்கிறார்கள்.
வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும்
வகையில் பெரம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலக தரத்திலான
பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான
மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டு ஒன்றுக்கு தற்போதுள்ள ஐந்து லட்சத்திலிருந்து ரூபாய்
25 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் மதுரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மண்டல புற்றுநோய்
மையம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தரமான மருத்துவ சேவைக்கு தேவையான செவிலியர் மருந்தியல் மற்றும்
துணை மருத்துவ பணியாளர்களை உருவாக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூபாய்
351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
அதோடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை
பராமரிக்கும் விதமாக வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள் வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக
மாதம் தோறும் ரூபாய் 75 ஆயிரம் வாகன படியாகவும், அலுவலகப் பணிகளில் உதவி செய்ய உதவியாளரை
நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூபாய் 25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங்கப்படும்
என்றும் அறிவித்துள்ளார்.
இப்போது தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும்
படி ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது இன்று முதலமைச்சர் அறிவிப்பின்படி
இனி 2 லட்சத்து ஐயாயிரம் கிடைக்கும் அடிப்படை ஊதியம் 30,000 மாதாந்திரப் படி 10,000
தொகுதிப்படி 25,000 அஞ்சல்படி 2,500 தொலைபேசிப்படி 7,500 தொகுப்புப்படி 5,000 வாகனப்படி
25,000 கிடைக்கும்.
அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 2,500 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பையும், ஆறு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் முதன்நிலை செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும் மற்றும் கட்டணமில்லா முதியோர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்