News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

முதல்வர் விஜய்க்குத் தெரியாமல் இந்த ஆட்சியில் எதுவும் நடப்பதில்லை என்று அமைச்சர்கள் நெஞ்சை நிமிர்த்தி பேசுகிறார்கள். ஆனால், போக்குவரத்துத் துறையில் வடமாநில தொழிலாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவதாக வரும் தகவல் அவருக்குத் தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1800 நடத்துநர் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்கு உத்திரப்பிரதேச நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள தவெக அரசைக் கண்டித்து, இன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்துவருகிறார்கள்.

ஏனென்றால், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ் தெரியாது. ஓரளவு தமிழ் தெரியும் என்றாலும் நம்முடைய உச்சர்ப்பு தெரியாது, புரிந்துகொள்ளவும் முடியாது. எனவே, பயணிகளுக்கும் வட மாநில கண்டக்டர்கள் நியமனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று போராடுகிறார்கள்.

வடமாநில தொழிலாளர்கள் இங்கு பணிக்கு அமர்த்தபடுவதை தாண்டி “ஒப்பந்த முறையில்” பணி என்பது தான் மிக பெரிய பிரச்சனை. நாளை, டெண்டர் ரத்து செய்யப்பட்டு தமிழக தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டாலும் அவர்களுக்கு நிரந்தரமான பணி கிடைக்காது.

ஆனால் தவெகவினர், ‘’இதற்கான டெண்டர் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது’’ என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

போக்குவரத்துக் கழகத்தில் உத்தரப்பிரதேச கம்பெனிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதை எதிர்த்து சிஐடியூ போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த டெண்டரை விஜய் ரத்து செய்ய வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். விஜய் நிச்சயம் ரத்து செய்வார் என்றே நம்பலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link