News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

கரூர் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசிய சம்பவம் செம வைரலாகியுள்ளது. இந்த விவகாரத்தை திமுக திருப்பியடிக்கத் தொடங்கியிருக்கிறது.

‘பயந்து ஓடிய விஜய்யின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம்’ என்று முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். ’’தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று செந்தில் பாலாஜி சாட்டையால் அடித்திருக்கிறார்.

திமுகவினர், ’வரலாற்றின் பக்கங்களில் நீங்கா இடம் பெற்ற 41 உயிர்களை கொ.ன்று விட்டு திரும்பிப் பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல் புறமுதுகிட்டு ஓடிய ‘முதுகு நினைவுச் சின்னம்’ என்று ஏஐ இமேஜ் உருவாக்கி பரபரப்பு கிளப்பியிருக்கிறார்கள்.

அதேபோன்று அதிமுகவினர், ‘’41 அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட இம்சை அரசன் வண்டியில் ஏறிய இன்றைய முதலமைச்சர், “கூட்டுக் களவாணிகள்” என்ற தரங்கெட்ட சொல்லை பயன்படுத்தியுள்ளார். யார் கூட்டுக் களவாணிகள்? திமுக-வை எதிர்த்து 234 தொகுதிகளிலும் களம் கண்டு, இன்று வரை தனித்த அடையாளம் கொண்ட எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாங்களா? அல்லது, திமுக-வின் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்த திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இழுத்து, கூட்டுக் களவாணித்தனம் செய்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் நீங்களா?

“அன்று கரூருக்கு தாமதமாக வந்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று ஒரு வார்த்தை உங்களது உரையில் இருந்ததா? தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மனமில்லாத ஒருவர் எப்படி தலைவராக முடியும்?

கரூர் துயரம் நடந்த போது “ஓடி ஒளிந்ததை” ஓடி ஒளிந்தீர்கள் என்று தானே சொல்ல முடியும்? விழுப்புரத்தில் முன்பொரு முறை பார்த்த உங்கள் ஓட்டத்தை திருச்சி விமான நிலையத்தில் தமிழகமே பார்த்ததே? கரூர் துயரம் நடந்த மூன்றே மாதங்களில் மலேசியா ஆடியோ லாஞ்ச் மேடையில் “Blastu Blastu” என்று போட்டீர்களே… அது என்ன “ஜனநாயகக் குத்தாட்டமா?” மக்கள் துயரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் குத்தாட்டம் போட்ட நீங்கள் எங்களைப் பற்றி பேசுவதா?’’ என்று வெளுத்து வாங்குகிறர்கள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link