Share via:
லாட்டரி நடத்துபவரிடம் எதற்காக நன்கொடை பெற்றீர்கள் என்று ஆதவ்
அர்ஜூனா எழுப்பிய விவகாரம், அவருக்கே சிக்கலாக மாறிவருகிறது.
நேற்றைய தினம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவினரைப் பார்த்து ஏன்
சாராய ஃபேக்ட்ரி நடத்துகிறார்கள் என்று கேள்வி கேட்டார். உடனே திமுகவினர், ‘நீங்கள்
ஏன் லாட்டரி தொழில் நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளிப்பதாகச் சொல்லி, லாட்டரி தொழில் நடத்துபவர்களிடமிருந்து
900 கோடி ரூபாய் ஏன் நன்கொடை பெற்றீர்கள் என ஆதவ் அர்ஜுனா மீண்டும் கேள்வி கேட்டார்.
அதற்கு உதயநிதி, ‘ஏன் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மாமனாரிடம் தான் கேட்க வேண்டும்’
என உதயநிதி கூறிய பிறகும் ஆதவ்,’’உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் தான் ஏன் வாங்கினீர்கள்
என்று தெரியும். உங்க அப்பா இங்க இல்லை. அவரிடம் வீட்டிற்கு சென்று கேட்டுவிட்டு பதில்
சொல்லுங்கள்’’ என்றார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, ‘’நன்கொடை என்பது அகில
இந்திய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் வாங்கியுள்ளன. அதற்கு வருமான
வரி கட்டியிருப்பார்கள். அது அவர்களின் வங்கிக் கணக்கில்தான் இருக்கும். அதை லஞ்சப்
பணமாக உருவகப்படுத்துவதே தவறு. அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.” என்று
நெத்தியடி கொடுத்தார்.
இதுகுறித்து திமுகவினர், ‘’மார்ட்டின் நிறுவனம் மொத்தம் ₹1,368 கோடி
மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியிருந்தது. அதில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அத்தனை
முக்கிய கட்சிகளுக்கும் பணம் கொடுத்திருக்கிறார். எனவே, சபையில் இருந்த மாமியாரிடமும்
கேட்டிருந்தால் உடனே பதில் கிடைத்திருக்கும்.
இந்த கேள்வி கேட்பவர் இன்னொரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
அதாவது, ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனரும், மார்ட்டின்
குடும்பத்தைச் சேர்ந்த ஜோஸ் சார்லஸ் சமீபத்தில், ‘’ஆதவ் எனது தந்தையின் பணத்தை தவறாக
பயன்படுத்துவதோடு, எங்கள் குடும்பத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறார்” என்று
வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருந்தார். அந்த குற்றச்சாட்டுக்கு ஆதவ் இதுவரை தெளிவான
விளக்கம் அளித்திருக்கிறாரா?
அதோடு ஜான் பிரிட்டோ, ஜான் கென்னடி போன்றவர்கள் மீதும், லீமா ரோஸ்
மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா துணைவியார் மீது கேரளாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்து உள்ளது. முதல்வர்
விஜய் ஊழல் இல்லா ஆட்சி, போதை பொருள் இல்லா ஆட்சி என்ற வாக்குறுதி கொடுத்துள்ளார்.
ஆனால் விஜயின் அமைச்சரவையில் உள்ள அமைச்சரின் மனைவி மற்றும் உறவினர்கள் சர்வதேச போதைப்
பொருள் குற்றச்சாட்டில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு சட்டசபையில் பதில் சொல்வாரா ஆதவ்..?.