Share via:
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக நிற்பது குறித்தும் தன்னுடைய
அரசியல் முடிவு குறித்தும் இன்று பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ‘’மக்கள் தன்னை அன்புடன்
திருச்சிக்கு அழைத்தாலும், அங்கு நேரடியாகச் சென்று தான் போட்டியிடுவது அரசியல் தர்மம்
இல்லை’’ என்று அரசியல் வரவை தள்ளிப் போட்டிருக்கிறார். விஜய் பக்கமிருந்து எந்த ஆக்ஷனும்
இல்லாததாலே இந்த ரியாக்ஷன் என்கிறார்கள்.
இன்று தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த லாரன்ஸ், ‘’நான்
அரசியலுக்கு வருவது உறுதி… இப்போது கையில் இரண்டு படம் இருக்கு. அதை முடிச்சுட்டு
யோசிச்சுட்டு வந்து சொல்றேன்.
இப்போது திருச்சி வேட்பாளராக நிற்க வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து அதற்காக உண்மையாக உழைத்த பல தொண்டர்கள் அந்த
வாய்ப்புக்காகக் காத்திருப்பார்கள், மற்றொருவர் கஷ்டப்பட்டு விதைத்து, பாதுகாத்து வளர்த்த
மரத்தின் பழத்தை, தான் மட்டும் வந்து பறித்துச் சாப்பிடுவது நியாயம் இல்லை.
எந்த ஒரு கட்சியிலும் நேரடியாகப் பெரிய பதவிக்கு வரக்கூடாது என்பது
என் நிலைப்பாடு, முதலில் ஒரு அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து 3 அல்லது 4 ஆண்டுகள்
எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைக்க வேண்டும், அப்படி உழைத்த பிறகு,
கட்சியின் தலைமை (தலைவர் அல்லது முதல்வர்) தகுதியைப் பார்த்துத் தரும் பதவியை ஏற்பது
தான் சரியான தர்மம்.
நான் முதலமைச்சர் விஜய் அவர்களிடம் உரிமையோடு ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கான
மருத்துவ மற்றும் இதர உதவிகளைக் செய்து கொடுக்க சொல்லி கேட்பேன் அதில் நியாயம் இருக்கிறது’’
என்று கூறியிருக்கிறார்.
இன்னும் கையில் இரண்டு படம் இருக்கிறது என்பது இப்போதுதான் தெரியுமா..?
அரசியலுக்கு வர்றேன்னு அலப்பறை பண்ணிட்டு, விஜய் மதிக்கலைன்னு தெரிஞ்சதும் பதுங்கலாமா
என்று கிண்டல் செய்கிறார்கள்.
ரஜினி ரசிகர்கள் என்றாலே குழப்பம்தான்.