Share via:
விஜய்யின் கடைசி படமாக உருவான படம் ‘ஜனநாயகன்’. இந்தாண்டு பொங்கல்
வெளியீடாக ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்சார், நீதிமன்றம்
காரணமாக தள்ளிப்போன இந்த படம் இம்மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று உறுதியான தகவல்கள்
வெளியாகின்றன.
ஜனநாயகன் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு சென்சார் ஆட்சேபம்
தெரிவித்தது. அதனை படக்குழு மாற்றம் செய்த பின்னரும் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட,
நீதிமன்றத்தை நாடியது படக்குழு. ஒரு கட்டத்தில் படக்குழு தங்கள் வழக்கை வாபஸ் பெற்று,
படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டது. அதன்படி, ரிவைசிங் கமிட்டி சென்ற
பின்னரும் சான்றிதழ் வழங்குவது பற்றி எந்த தகவலும் இல்லை.
தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி ஜனநாயகன் படம் முழுவதும் இணையத்தில்
சட்டவிரோதமாக வெளியானது. இது தொடர்பாகவும் பல கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பின்னர்
தேர்தல் முடிந்து நடிகர் விஜய், முதல்வர் விஜய் ஆகிவிட்டார். ஆனால் `ஜனநாயகன்’ படத்துக்கு
மட்டும் எந்த விடிவும் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில், `ஜனநாயகன்’ படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்துவிட்டது
எனவும், படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கி, வசனங்களை ம்யூட் செய்ய கூறியுள்ளது எனவும்
சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு `ஏ’ சான்றிதழ் தர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து
ஓரிரு தினங்களில் சான்றிதழ் கிடைத்துவிடும் என்கிறார்கள்.
இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம். ஜூலை 24 அல்லது ஜூலை 30 ஆகிய
இரண்டு தினங்களில் ஒன்றில் ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. விரைஇல் படத்தின் புதிய டிரெய்லர் கூட வெளியிடப்படலாம்
எனவும், தளபதி விஜய்க்கு பதிலாக முதலமைச்சர்
விஜய் என போட்டும் படம் வெளியாகும் என்கிறார்கள்.
இணையத்தில் அனைவரும் இந்த படத்தை பார்த்துவிட்டனர் என்றாலும்,
மீண்டும் தியேட்டரில் திருவிழா நடக்கப்போகிறது.