News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

மயிலாடுதுறை சாந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் பார்த்திபன் மற்றும் மாற்று சாதியை சேர்ந்த திவ்யதர்ஷினி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.

இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இது ஆணவப்படுகொலையாக இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்பியிருந்தனர். சாதி வெறியர்கள் அடித்து படுகொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இதை தற்கொலை என்று சமாதானம் பேசி விஷயம் பெரிதாகாமல் முடித்துவிட்டனர்.

இதற்கான ஆடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது. திருமாவளவனிடம் விசிக நிர்வாகி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கேட்டதற்கு, ‘’டெக்னிகலா வேணா சப்போர்ட் பண்ண முடியும்.. பொலிட்டிகளா இப்ப நாம வந்து பண்ண முடியாது..’’ என்று பேசி விஷயத்தை மூடி மறைக்கும்படி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறார்.

அதாவது, மயிலாடுதுறையில் நடந்தது ஆணப்படுகொலை இல்லையாம். அதனால், உடலை உடனே தகனம் செய்யுங்கள். ஆளும்கட்சிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

இதுவே திமுக ஆட்சி என்றால், நான் ஃபாரன்சிக் டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்திருக்கிறேன். இது ஆணவ கொலை தான்னு எனக்குத் தெரியும் என்று எகிறியிருப்பார். தவெக ஆட்சி என்பதாலும், வாங்கிய சோபாவுக்கு நன்றியுடன் இருக்கவேண்டும் என்பதாலும் இப்படி பேசியிருக்கிறார் திருமா.

இவரை மக்களின் மீட்பர், அரசியல் ஆசான் என்று பேசிய கட்சியினர் அத்தனை பேரும் கதிகலங்கி நிற்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link